கவிதை : பெரியாரைப் பெற்றிழந்தோம்! பெற்றி யிழந்தோம்!
பெரும்பணியைச் சுமந்த உடல்! பெரும்புகழைச் சுமந்த உயிர் ‘பெரியார்’ என்னும் அரும்பெயரைச் சுமந்த நரை! அழற்கதிரைச் சுமந்த மதி; அறியா மைமேல் இரும்புலக்கை மொத்துதல் போல் எடுக்காமல் அடித்த அடி! எரிபோல் பேச்சு! பெரும்புதுமை! அடடா, இப் பெரியாரைத் தமிழ்நாடும் பெற்றதம்மா! மணிச்சுரங்கம் போல்அவரின் மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த மழலைக் கொச்சை! அணிச்சரம் போல் மளமளென அவிழ்கின்ற பச்சை நடை! ஆரி யத்தைத் துணிச்சலுடன் நின்றெதிர்த்துத் துவைத்தெடுத்த வெங்களிறு! தோல்வி யில்லாப் பணிச்செங்கோ! அடடா, இப் பகுத்தறிவைத் […]
மேலும்....