சிறுகதை : ‘உறவினர் எதற்கு?’

விந்தன் “அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்கிறார்கள். அப்படியானால் இந்த அகண்டாகார (மிகப் பரந்த) உலகத்தில் அவ்வப்போது நடக்கும் அநீதி, அக்கிரமங்களுக் கெல்லாம் அவனே ஜவாப்தாரி(பொறுப்பாளி) யாகிறான் அல்லவா? ஆனால், தண்டனை மட்டும் அவனுக்கு இல்லையாம்; அவனால் ஏவப்பட்ட மனிதனுக்குத்தானாம்! _ இதென்ன வேடிக்கை! _ இப்படி அதிசயத்துக்கு ஆளாகி, ஆண்டவனைப் பற்றி ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்குக் கிடைக்கும் பதில் இதுதான். “அவனுடைய லீலா வினோதங்கள் அற்பர்களாகிய நமக்குப் புரியாதவை!’’ அது எப்படியாவது போகட்டும்; ஒரே […]

மேலும்....

பெரியாரைப் போற்றுவோமே!

தேடிவரும் வான்பருந்தை உயரே கண்டு                ஓடிவந்து குஞ்சு காக்கும் கோழி போன்று நாடிவந்த இனப்பகைவர் நாட்டிவிட்ட                கேடிழைக்கும் பிறவி பேதம் தகர்த்தெறிய ஓடியோடி சாதிமதச் சாக்க டையில்                ஒவ்வாத மூடவழக் கத்தில் மூழ்கி வாடிநாளும் முகவரியைத் தொலைத்த நம்மை                மீட்டெடுத்தார் பகுத்தறிவுப் பெரியா(ர்) அன்றோ!   ஆரியத்தின் சூழ்ச்சியிலே சிதைந்து வீழ்ந்தே                அறிவிலியாய் விலங்கினமாய்ச் சிந்திக் கின்ற வீரியத்தைத் தொலைத்தவராய்ச் சாதி சாமி                மதம், சடங்கு, சாத்திரங்கள் தம்மி […]

மேலும்....

தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்!

சாரோன் செந்தில் முக்கிய அறிவிப்பு:  எனது இராமாயண நாடகம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கருதுபவர்கள் கண்டிப்பாக என் நாடகத்திற்கு வர வேண்டாம்! அவர்கள் காசும் எனக்கு வேண்டாம்! மீறிவந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும்.         இவண், அன்பன், எம்.ஆர்.ராதா என்ற தகவலோடு 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி தேவர் மன்ற வாசலில் ஒரு விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூடி மொய்த்து நின்றார்கள். இப்படி ஒரு விளம்பரத்தைத் […]

மேலும்....

கவிதை : நெருப்பின் பிறப்பு

– முனைவர். ப. ஆசைத்தம்பி இந்தியா முழுவதும் நத்தையாக நகர்ந்து வந்த ரத யாத்திரை ராக்கெட்டாகப் பறந்தால் அது பெரியார் மண்…   சரஸ்வதியின் தந்தை பிரம்மன் – ஆனால் பிரம்மனின் மனைவி சரஸ்வதி எப்படி என்ற பெரியாரின் கேள்வித் தீ இன்னும் அணையாத் தீயாக ஆர்ப்பரிக்கிறது.   பெரியாரின் கேள்வித் தீயில் சாம்பலான கும்பல் தமிழருக்கும் திராவிடத்திற்கும் சிண்டு முடிக்கிறது.   இது வரை தமிழர்களை எதிரிகள் வீழ்த்தியதில்லை. துரோகிகளே வீழ்த்தியிருக்கிறார்கள்.   துரோகத்தைத் தூள் […]

மேலும்....

தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : இளைஞர்களின் பெரியார்

கோவி.லெனின் அந்தக் கிழவர் எப்படி உருப்பெருக்கும் ஆடியைக் கையில் வைத்துக் கொண்டு, தாளில் அச்சிடப்பட்டிருந்த வார்த்தைகளுக்கு இடையில் உள்ள உண்மையான அர்த்தத்தைத் தேடிக் கண்டடைந்து மக்களிடம் விளக்கி,  தெளிவுபடுத்தினாரோ, அதுபோலவே அந்தக் கிழவரின் தொண்டறத்தை – சிந்தனையை – செயல்பாடுகளை இன்றைய காலக் கண்ணாடி கொண்டு கச்சிதமாகக் கவனித்து, அதிலிருந்து சமூகநீதிக்கும் மானுடநேயத்திற்குமான கருத்துகளைத் தேர்வு செய்து மனிதகுல எதிரிகளை நோக்கி எறிகணையாக வீசுகிறார்கள் இளைஞர்கள். கறுப்புச் சட்டை  அணிந்திருக்கும் அந்த இளைஞர்கள் அத்தனை பேரும் திராவிடர் […]

மேலும்....