இயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு

அய்யாவின் அடிச்சுவட்டில்…   கி.வீரமணி  28.8.1988 தொண்டராம்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு பேசுகையில், தஞ்சையில் நிகழ்ந்த ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். முப்பத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு 1957லே தஞ்சையிலே அய்யா அவர்களுக்கு முதன்முதலாக எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவிலே, அய்யா அவர்கள் ஜாதி ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியல் சட்டத்தில் எவையெல்லாம் ஜாதியைப் பாதுகாப்பனவாக இருக்கின்றதோ அவற்றை எதிர்த்து அரசியல் சட்ட எரிப்புப் போரை இந்தியாவிலேயே […]

மேலும்....

பெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்!

முத்தையா வனிதா ரித்து கரிதால் தேசிய அளவில் ஒரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கான சாதனைச் செயல் என்னும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் பெண்கள் என்பதை நிரூபிக்கும் விதமாகக் கடுமையாக உழைத்து உலக அரங்கில் நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார், தமிழக பெண் விஞ்ஞானி முத்தையா வனிதா. உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 30 சதவிகிதம் பெண்கள் பணியாற்றினாலும் கடந்த 5 ஆண்டுகளில் விண்கலன்களை உருவாக்கும் திட்டப் பணிகளில் பெண்களுக்கு […]

மேலும்....

சிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்?

தேவ நேயப் பாவாணர் மதப் பைத்தியம் பொதுவாக ஒரு மதம் ஏற்படும்போது, அதன் அடியார்கள் அல்லது அதை ஏற்படுத்துவோர் தங்கள் மதக் கருத்துகளையும், தங்கள் முன்னோரைப் பற்றிய சில சரித்திரப் பகுதிகளையும் தொகுத்து நூல்கள் எழுதி வைக்கிறார்கள். அல்லது பாட்டுப் பாடி வைக்கிறார்கள். அவை அம்மதத்திற்கு மறை (வேத) நூல்களாகின்றன. அவற்றில், கலையியல் உண்மைக்கு மாறான சில கருத்துகள் இருக்கலாம். கலை வரவர வளர்ந்து வருகிறது. கலை வளர்ச்சியடைந்த காலத்தில், அதன் உண்மைக்கு மாறான கருத்துகள் மறை […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி! சமஸ்கிருதத்திற்கு மூலமொழி தமிழே!

மஞ்சை வசந்தன் உலகின் பல மொழிகளுக்கும் மூலமொழி தமிழ் என்பதோடு செம்மொழிக்குரிய தகுதிகளையும், மிகத் தொன்மையையும் உடையது. ஆனால், சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல. அது கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தொன்மைத் தமிழ் சொற்களைப் பயன்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்டது. உண்மை இப்படியிருக்க அதை மறைத்து சமஸ்கிருதமே உலகின் மூல மொழி எனவும், தொன்மை உடையது எனவும், செம்மொழி தகுதி பெற்றது எனவும் ஆரிய பார்ப்பனர்கள் மோசடியாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர். அண்மையில் மேல்நிலை வகுப்பு தமிழ்ப் […]

மேலும்....

சாமி கைவல்யம்

பிறந்த நாள்: 22.8.1877 1877இல் கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர் இயற்பெயர் பொன்னுசாமி. இவர்களின் முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். ஒருமுறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. கைவல்யம் என்ற வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் கைவல்யம் என்றே அழைக்கப்படுபவர் ஆனார். அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன […]

மேலும்....