இடஒதுக்கீட்டிற்கு எதிராக “இந்து”வின் ஒப்பாரி

  17.12.1981 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில், “சேலம் உருக்காலை தமிழர்களுக்குக் கிடையாதா?’’ என்ற நீண்டதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சேலம் உருக்காலை அமைய வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகமும் நமது இயக்கமும் ஏனைய தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஒருமனதாகக் குரல் கொடுத்தன. நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு அங்கே ஒரு உருக்காலையை அமைக்க முன்வந்தது மத்திய அரசு. அறிவித்துப் பலகாலம் ஆகியும், பணிகள் தொடராமல் இருந்தன. அதற்காகவும் கூக்குரல் கிளம்பியது; பிறகு ஆமை வேகத்தில் பணிகள் நகர்ந்தன. […]

மேலும்....

வாசகர் மடல்!

மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, கோவில்பட்டியிலிருந்து எஸ்.ஜெயா எழுதுவது. அக்டோபர் 1_15 உண்மை இதழைப் படித்தேன். பெற்றதாய் பிள்ளைகளையும் பெற்ற பிள்ளைகள் தாயையும் மறக்கும் காலம் இது. நம்முடைய திராவிடர் கழகம்தான் நன்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. பழையக்கோட்டை அர்ச்சுனன், செ.தெ.நாயகம் இவர்கள் யார்? இவர்கள் செய்த தொண்டு என்ன? இவர்கள் மட்டும் அல்ல, இன்னும் அநேகரை வெளியிட்டு அவர்கள் செய்த நற்பணிகளையும் எழுதி வெளியிட்டு அவர்கள் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை வெளியிடுகிறீர்கள். என்னைப் போன்றவர்களுக்கும் உண்மை […]

மேலும்....

புளிய இலை, பொடுதலை இலை…

   இவை இரண்டையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதை ஒரு துணியில் சின்ன மூட்டையாகக் கட்டி வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் போலக் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தால், இடுப்புவலி மற்றும் முதுகுவலி நீங்கும்.      

மேலும்....

18 வயதுக்குட்பட்ட பெண் மனைவியானாலும் உடலுறவு பலாத்காரமே!

இந்திய தண்டனைச் சட்டம் 375இன்படி பெண்களை பலாத்காரம் செய்வது குற்றம். ஆனால், இதில் பிரிவு 2இல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இண்டிபென்டன்ட் தாட்ஸ்’ எனும் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் அரசு வழக்குரைஞர் கலாச்சார நடைமுறைகளை அறிந்தே சுய தெளிவுடன் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வாதாடினார். ஆனால், இது பெண் குழந்தைகளின் உரிமைக்கு எதிரானது என்றும், இது குழந்தைத் திருமணங்களை […]

மேலும்....

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்! கேரள அரசு வரலாற்றுச் சாதனை! தமிழக அரசு தாமதிக்கலாமா?

“கோயில் கருவறையில் பாதுகாப்புத் தேடிக் கொண்டுள்ள ஜாதி அங்கும் ஒழிக்கப்பட வேண்டும்’’ என்று தந்தை பெரியார் தன் இறுதி மூச்சு நிற்கும்போதுகூடப் போராடினார். 1970இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டம் இயற்றி இந்தியாவுக்கே வழிகாட்டினார். இதன்மூலம் தந்தை பெரியாரின் இதயத்தில் தைத்த முள்ளை அகற்ற முயன்றார். ஆனால், அதை எதிர்த்தவர்கள் தொடுத்த வழக்குகளினால் அச்சட்டம் நிறைவேற்றப் படாமல் முடக்கப்பட்டது. 2006இல் மீண்டும் கலைஞர் அவர்கள் ஒரு தனிச் […]

மேலும்....