தேவாரத்திற்குத் தீண்டாமை

1926ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி சிவன் கோயிலில் வேதம் ஓதி அர்ச்சனை செய்தபின் தேவாரம் படிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பார்ப்பனர்கள் அந்தக் கோயில்களையே புறக்கணித்தனர். மேலும் சங்கரன்கோயிலில் தேவாரத்துக்கு தடையே வாங்கினர். அவை பற்றிய செய்திகள்: இதுகூட வகுப்புத் துவேஷமா? திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு, தமிழில் தேவார பாராயணம் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு […]

மேலும்....

அவர் அமெரிக்க மோடி! இவர் இந்திய டிரம்ப்!

கே:    நாட்டின் முக்கிய தொழிலான வேளாண்துறையை தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க பிரதமர் மோடி முனைப்புக் காட்டுவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலல்லவா ?              –  கி.மாசிலாமணி, தஞ்சை ப:        ‘விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்கள் அநீதிகள் பல தொடர்கின்றன. இதையும் அப்பட்டியலில் சேர்த்துக்கொள்க. ‘ஜெய் கிசான்!’ என்பர்! கே:    இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பிஜேபி.யின் முக்கியத் தலைவர்கள் கூறிவரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியப் பொருளாதாரம் பிரம்மிக்கத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பாராட்டுவது […]

மேலும்....

ஆரியம் பிளக்கும் திராவிடக் கோடரி!

 ஈரோட்டுப்பட்டறையில்கூர் தீட்டப்பட்டகருப்புப் போர்வாள்! இனத்திற்குஇடர் வருகையில்சுடர்விட்டு எழும்செம்மஞ்சள் நெருப்பு! உலகெங்கும்பாய்ந்து ஓடும்நாத்திக நதிகளைஇணைக்கும் மாக்கடல்! பகுத்தறிவு கருத்துகளைபரப்பிடும் நூல்களைசலியாது விளைவிக்கும்பச்சை வயல்! முற்போக்குக் கருத்துகளைமுற்போக்காளர்களைமுன்னின்று வரவேற்கும்சிவப்புக் கம்பளம்! சூரியனோடுகை கோர்த்துகாவி இருள் விரட்டும்ஒளி நிலவு! ஜாதிய மதவாதத்தைமுன்னெடுக்கும்ஆரிய வாதத்தைப் பிளக்கும்திராவிடக் கோடரி! எதிரிகளும் துரோகிகளும்இயக்கத்தை முடக்கபின்னிய சூழ்ச்சிகளைசாம்பல் ஆக்கியசாதனை நெருப்பு! – பாசு.ஓவியச்செல்வன்    

மேலும்....