Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆரியம் பிளக்கும் திராவிடக் கோடரி!

 ஈரோட்டுப்
பட்டறையில்
கூர் தீட்டப்பட்ட
கருப்புப் போர்வாள்!

இனத்திற்கு
இடர் வருகையில்
சுடர்விட்டு எழும்
செம்மஞ்சள் நெருப்பு!

உலகெங்கும்
பாய்ந்து ஓடும்
நாத்திக நதிகளை
இணைக்கும் மாக்கடல்!

பகுத்தறிவு கருத்துகளை
பரப்பிடும் நூல்களை
சலியாது விளைவிக்கும்
பச்சை வயல்!

முற்போக்குக் கருத்துகளை
முற்போக்காளர்களை
முன்னின்று வரவேற்கும்
சிவப்புக் கம்பளம்!

சூரியனோடு
கை கோர்த்து
காவி இருள் விரட்டும்
ஒளி நிலவு!

ஜாதிய மதவாதத்தை
முன்னெடுக்கும்
ஆரிய வாதத்தைப் பிளக்கும்
திராவிடக் கோடரி!

எதிரிகளும் துரோகிகளும்
இயக்கத்தை முடக்க
பின்னிய சூழ்ச்சிகளை
சாம்பல் ஆக்கிய
சாதனை நெருப்பு!

– பாசு.ஓவியச்செல்வன்