கடவுள் நம்பிக்கை இல்லை; புத்தக் கோட்பாடு பிடிக்கும்!

  தந்தையைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், புத்த வழிபாட்டில் கவனம் செலுத்துவது பிடிக்கும் என்று கமல்ஹாசனின் மகள் நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார். அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் விவேகம் படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். அப்படத்தில் நடித்தது தொடர்பாக சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்கள் தந்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவர். உங்கள் அக்கா ஸ்ருதியோ கடவுள் நம்பிக்கை உள்ளவர். நீங்கள் எப்படி? என்று ஒரு […]

மேலும்....

நீட் தேர்வால் நிலைகுலைந்து செங்கல் சுமக்கும் சேலத்து மாணவி!

பனிரெண்டாம் வகுப்பில் 1152 மதிப்பெண்கள் எடுத்தும் குடும்ப வறுமை காரணமாக மேலே படிக்காமல் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார் ஒரு மாணவி. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களில் சதவீதம் அடிப்படையில் பெண்கள் தொடர்ந்து தேர்ச்சி பெற்று வந்தாலும், ஆண்கள்தான் உயர் கல்வியில் அதிகம் இடம் பெறுகின்றனர். பெண்களுக்கான கல்வி பல காரணங்களால் தடைபட்டுப் போகும் சூழல்தான் இன்றளவும் இருந்து வருகிறது. அதில் முக்கிய காரணமாக கூறப்படுவது வறுமை. அப்படி குடும்ப வறுமை காரணமாகத் தொடர்ந்து படிக்க […]

மேலும்....

கடன் வாங்கிய பணத்தை வட்டியுடன் ஆனைமுத்து கொடுத்தாக வேண்டிய தீர்ப்பு!

“அய்யா, அம்மா இருவரும் மறைந்துவிட்ட நிலையில், அய்யா மற்றும் அம்மா போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திக்கு இயன்ற அளவுக்கு உழைக்கவும், அவர்கள் செய்துவந்த உயிர்நாடிக் கொள்கையை இயன்ற அளவு பரப்பவும், மனிதத் தன்மையோடும் பண்போடும் உண்மையும் ஒழுக்கமும் உயர்வெனக் காட்டிய அவர்கள் வழியிலேயே நான் இயங்கி வந்தேன்; வருகிறேன். அம்மா அவர்கள் செயலாளராக இருந்த காலத்தில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் கடன் வாங்கி அதற்கான ‘புரோ’ நோட்டை எழுதிக் கொடுத்தவர் திருச்சியைச் சார்ந்த […]

மேலும்....

செய்யக் கூடாதவை

கவனச் சிதறல்களை அனுமதிக்கக் கூடாது நாம் எந்த ஒன்றையும் செம்மையாய், இழப்பின்றிச் செய்ய வேண்டுமானால் கவனம் சிதறாமல் வழி செய்ய வேண்டும். படிக்கின்ற குழந்தைக்குத் தொலைக்காட்சியும், வீட்டில் உள்ள நிகழ்வுகளும் கவனச் சிதறலை ஏற்படுத்தும். எனவே, அவர்களுக்குக் கவனச் சிதறலில்லா தனியறை வேண்டும். வாகனம் ஓட்டுபவர்களுக்கு செல்பேசி, அடுத்தவர் பேச்சு வேறு நினைவுகள் போன்ற கவனச் சிதறல் கூடாது. அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அறவே கவனச் சிதறல் கூடாது. ஆளகின்றவர்களுக்கு அலங்காரம், ஆடம்பரம், விளம்பரம், புகழ்ச்சி, […]

மேலும்....

புயல்

“நாளை மறுநாள் காலை பதினோரு மணிக்கு ‘காசா’ என்ற கடும் புயல் வீசும். அதன் வேகம் மணிக்கு நூற்று இருபது கிலோ மீட்டர் ஆக இருக்கும். அப்போது வீடுகளின் மேற்கூரைகள் பிய்த்து எரியப்படலாம். மரங்கள் முறிந்து விழும். மின் கம்பங்கள் உடைந்துவிழும். பலத்த மழை பெய்யும். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும். பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம்’’ தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பைக் கேட்ட மதனின் உடல் நடுங்கியது. “ஆண்டவா! இது என்ன சோதனை! இப்போது தானே புது வீடு […]

மேலும்....