குரல்

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றுவது மிகவும் கொடூரமான நடைமுறை. இந்த நடைமுறையை 6 மாதத்தில் ஒழிக்க நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் சபதம் ஏற்க வேண்டும். மலம் அகற்றும் பணியில் தலித், பழங்குடியின மக்களை ஈடுபடுத்துபவர்களை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 3 ஆவது பிரிவில் தண்டிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவுறுத்தியது. இதை எல்லா மாநில அரசுகளும், முழு வீச்சில் அமல்படுத்த வேண்டும்.  

– மன்மோகன்சிங், பிரதமர், இந்தியா

மேலும்....

“ஓ ” ஒரு ஏழை பணக்கார ஏழை ஆகின்றார்

– சோம.இளங்கோவன்

ஏழை பணக்காரர் ஆவது ஆங்காங்கே நடப்பதுதான். அதில் பலர் தமது ஏழ்மையை மறைக்கப் பார்ப்பார்கள், பலர் மறந்தும் விடுவார்கள்.

ஆனால், மற்ற ஏழைகளைப் பார்த்து அவர்களின் மனம் நோகாமல் அவர்களுடன் பழகி, அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வைக்கும் பணக்கார ஏழைகள் வெகு சிலரே ! அதில் மிகவும் நேர்மையான மனதுடன் தெளிவாகவும், துணிவாகவும் செயல் பட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வின் ஒளிவிளக்கே என்று மனமாரப் புகழ்வது  ஓப்ராவை மட்டுமே!

மேலும்....

குழந்தை மனநிலை

பெற்றோர் கடமை என்ன? – மு.வி.சோமசுந்தரம் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும். கல்வி என்றால் இவை இரண்டும் தேவை என்பர். அடிப்படைக் கல்விக்கு 3ஆர் ‘3‘R’s’ என்று கூறுவர். படிப்பது, எழுதுவது, கணக்கு அறிவு என்பவை இம்மூன்றும் ஆங்கிலத்தில் Reading, Writing, Arithmetic  என்று கூறுவர். குழந்தை ஒவ்வொன்றுக்கும் இந்த மூன்று அறிவும் கல்வியின் துவக்கம் என்பர். முழுமைக் கல்விக்கு மேலும் மூன்று தேவை என்பர். கல்வியில் உளநூல் வல்லுநர், டாக்டர் ஜான் இர்வின் இதுபற்றிக் கூறுவதாவது: பெரியவர்களுக்கு […]

மேலும்....

(அ) சத்ய பாபா அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நேரடிப் புலனாய்வு – திடுக்…திடுக்

– மின்சாரம் ஊரில் இறங்கியவுடன் முதலில் நாம் சந்திப்பது பிச்சைக்காரர்களைத்தான். சத்தியபாபாவால் இதை ஒழிக்க முடிய வில்லையோ என்ற எண்ணம்தான் வந்தது. இப்பொழுது பிரச்சினை வியாபாரிகளுக்குத்தான். கூட்டம் குறைந்து விட்டது. ஒவ்வொரு கடையிலும் சாயிபாபாவின் படம் உண்டு. சாயி என்றோ பாபா என்றோ அடையாளப் பெயர் இல்லாத கடைகள் கிடையவே கிடையாது. சாயிபாபா இருக்கும் போது ஒவ்வொரு நாளும் வியாபாரிகள் ஒவ்வொருவரும் அங்கு சென்று அவரைத் தரிசித்துவிட்டுத்தான் கடையைத் திறப்பார்களாம்! சும்மா சொல்லக் கூடாது! மனுஷன் ஆன்மீகக் […]

மேலும்....

பா.ஜ.க.வின் முகமூடிகள்

நாட்டில் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க எவரும் குறுக்கே நிற்க மாட்டார்கள். அப்படியே உள்ளுக்குள் விரும்பும் நபர்கள் ஆனாலும்கூட, வெளிப்படையாக அதை ஆதரிக்க எவருக்கும் துணிவு வராது.

ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க நம் நாட்டில் திடீர் அவதாரங்களும், புதிய டூப்ளிகேட் மகாத்மாக்களும் கதர் அணிந்தும், காந்தி குல்லா போட்டும், காவி உடை அணிந்தும் இந்த தேசத்தைக் காப்பாற்ற புதிய கோடீசுவரர்களும், வருமானத்தில் பகுதியைக் கணக்கில் காட்டாத கண்ணியவாதிகளும் திடீரென தேர்தலில் நிற்காமலேயே நாடாளுமன்றச் சட்ட வரைவைத் தயாரிக்கும் குழு உறுப்பினர்களாகிவிட்டார்கள் – மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையின் இரட்டை வேடத்தாலும், கையாலாகாத்தனத்தாலும்!

மேலும்....