மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (16)

நுரையீரல் அழற்சி (PNEUMONIA) இதயம் கைப்பிடி அளவிலேயே உள்ள ஓர் இன்றியமையாத – ஓய்வில்லாமல் வேலை செய்யும் – உடல் பொறி. ஆனால் இதயத்தை ஒட்டியுள்ள நுரையீரல் இதயத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரிதான, ஓய்வில்லாமல் உழைக்கும் இன்னொரு உடல்பொறி, நமது மார்புப் பகுதி முழுவதும் பரவியுள்ள நுரையீரல், விலா எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது. இதயத்தைப் போல் கடுமையான தசைகளால் உருவாகாமல், மிகவும் மென்மையான காற்றழைகளால் உருவானதே நுரையீரல் (Lungs)  நுரையீரல் அடிப்படைச் சொல் பல்மோ என்னும் இலத்தின் […]

மேலும்....

கவிதை : இந்தி எதற்கு?

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சீர்மிகுந்த நாட்டினிலே  இந்தி எதற்கு? சிக்கலினை வளர்ப்பதற்கு  ஆட்சி எதற்கு?   ஊர்கள்தோறும் வடவர்இந்தி  ஓட்டம் எதற்கு? ஒற்றுமையைக் கெடுப்பதற்கு  ஆட்சி போதாதோ?   சூழ்ச்சியொடும் இந்தியினைக்  கொணர்வ தெதற்கு? தொல்லையினை விலைகொடுத்து  வாங்கல் எதற்கு?   வெற்றிபெற்ற தமிழிருக்க  இந்தி எதற்கு? வீரர்களின் தோள்தினவால்  வீழ்ச்சியுறற்கா?   கற்பதற்கு வழிகளில்லை  கலகம் எதற்கு? காப்பதற்குத் திட்டமில்லை  கருத்துமில்லையே,   தெம்பில்லாத மக்களிடை  தீமை எதற்கு? திராவிடத்தில் ஒற்றுமையைத்  தீர்ப்பதெதற்கு?   வம்புசெயும் […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் – ஓர் ஒப்பீடு!

முனைவர் த.ஜெயக்குமார் பகுத்தறிவு உலகின் 19ஆம் நூற்றாண்டில் உலகப்புகழ் அறிவு மாமேதை, ஒப்பற்ற பகுத்தறிவுப் பரப்புரையாளர், அமெரிக்க வல்லரசு நாட்டில் 1833ஆம் ஆண்டு பிறந்தவர் கர்னல் இராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவர். அதே நூற்றாண்டில், சற்றேறக்குறைய 46ஆண்டுகளுக்குப் பின் 20ஆம் நூற்றாண்டின் முதன்மை தத்துவச் சிந்தனையாளராகவும், ஈடு இணைற்ற சமூக  சீர்திருத்த சமத்துவக் கொள்கைப் போராளியாகவும், இந்தியத் திருநாட்டில் 1879ஆம் ஆண்டு பிறந்தவர்தான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் எனும் ஈ.வெ.ரா. (ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி) […]

மேலும்....

பெண்ணால் முடியும் : உலகின் இளம் பெண் பிரதமர்

தந்தை பெரியாரின் பெண்ணிய பொன்மொழிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவது,  பெண்களுக்கு படிப்பு, சொத்துரிமை ஆகியவை இருந்துவிட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்துவிடும். நம் முன்னேற்ற வண்டிக்குப் பெண்கள் முட்டுக்கட்டை என்பது நம் சமுதாயத்துக்கே அவமானமாகும். ஆதலால், சீர்திருத்தம் செய்ய வேண்டியவர்கள், பெண்கள் விடுதலையும், அறிவும், படிப்பும் பெறும்படி பார்க்க வேண்டும்.  ( 29.9.1940, குடிஅரசு பக்கம் 15) தற்போது மிக உயர்ந்த அதிகாரம் என்னும் பொறுப்பில் உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணியாக அண்மைக் […]

மேலும்....

கு.வெ.கி.ஆசான் – மறைந்த நாள் 22.10.2010

கோவையைச் சேர்ந்த கு.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்தான் நமது ஆசான்! மலையாளப் பெருங்கவிஞர் குமரன் ஆசான் அவர்களின் படைப்புகள்மீது தீராக் காதல் கொண்டு, தம் பெயரையே ஆசான் என்று மாற்றிக் கொண்டவர். அவர் எழுதிய நூல்கள் மொழி உரிமை, ஜாதி உருவாக்கம், பாவேந்தர், பெரியார், குமரன் ஆசான், ஈழத் தமிழர் உரிமைப் போர்; சாகுமகராஜ், மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், Gora’s Positive Etheism and firewill, Thiruvalluvar on Learning and Wisdom உள்ளிட்ட நூல்களை உருவாக்கிய […]

மேலும்....