கவிதை: நமக்கு வேண்டாம்!

நலக்கல்வி புதுக்கல்வி நாட்டு மக்கள்                 நன்மைக்கே உருவான கல்வி என்றே குலக்கல்வி தனைமீண்டும் கொண்டு வந்தே                 குரைக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மக்கள் பலருக்கும் கேடுதரும் அழிவைச் சேர்க்கும்                 பயன்நல்கா சமற்கிருதம் இந்தி மூலம் சிலருக்கு மூன்றுவிழுக் காட்டி னர்க்கே                 சிறப்பனைத்தும் சேர்த்திடவே துடிக்கின் றார்கள்! புதியகல்விக் கொள்கையினால் தமிழ் நாட்டுக்குப்                 புல்லளவும் பயன்விளையப் போவ தில்லை! ஒதியமரம் உத்திரத்துக் காகா! எந்த                 ஒப்பனையும் சிறுபொழுதில் கலைந்து போகும்! மதியிழந்து […]

மேலும்....

மருத்துவம்: இதய, நுரையீரல் பொறி (ECMO)

(Heart Lung Machine) “எக்மோ’’ கருவியைப் பற்றி இப்பொழுது அடிக்கடி படிக்கின்றோம். முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு எக்மோ ((ECMO- Extra Corporal Membrane Oxygenation) மருத்துவம் செய்ததாக பரபரப்பான செய்தியை நாமறிவோம். சமீபத்தில்கூட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இம்மருத்துவம் செய்யப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். நுரையீரல் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, முழுதும் செயலிழந்துவிட்டால் “காற்று மாற்றம்’’ செய்ய இயலாத நிலை ஏற்படும். அவ்வேளைகளில் நுரையீரல் செய்யும் வேலையை, வெளியில் உள்ள ஒரு பொறி செய்யும். எப்படி […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (18) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)

மரு.இரா.கவுதமன் நுரையீரலில் ஏற்படும் நாள்பட்ட நோய்களால், நுரையீரலில் உள்ள திசுக்கள் சேதமடையும். அதனால் நுரையீரல் முழு அளவு காற்று மாற்றம் செய்ய இயலாத நிலை ஏற்படும். இதையே “நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’’ (Chronic Obstructive Pulmonary Disease) என்கிறோம். ஒரு முறை இந்நோய் வந்து, நுரையீரல் திசுக்கள் அழிந்துவிட்டால், அத்திசுக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாது. மருந்துகளால் நோயின் அறிகுறிகளை மட்டுமே குறைக்க முடியுமே ஒழிய, நோயை முழுமையாகக் குணமாக்க முடியாது. சில நோயாளிகள் இந்நோயோடு, […]

மேலும்....

வாசகர் மடல்

‘உண்மை’ நவம்பர் 1 -15 இதழில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் அருமை. ‘தீபாவளி’ பற்றிய மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. ஆரியர்கள் எப்படி தன்னுடைய பண்டிகைகளை நம்முடைய பண்டிகைகளாக மாற்றி அதன் மூலம் வணிகம் செய்கிறார்கள் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் வே.எழில் அவர்களின் ‘ஆண் குழந்தை வளர்ப்பு’ கட்டுரை இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. பெற்றோர்கள் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் உடல் போக்குகளையும், அவர்களுடைய குணம் சார்ந்த […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (66): வைத்தியநாத அய்யரின் யோக்கியதை!

நேயன் சுசீந்திரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பிரவேச உரிமையை நிலைநாட்ட தீண்டாதாரும் அவர்களிடம் அனுதாபம் உடையவர்களும் ஆரம்பம் செய்திருக்கும் சமதர்மப் போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தினந்தோறும் மாலை 4:00 மணிக்கு ஆலயத்துக்குச் செல்லும் சந்நிதித் தெருவில் 4 தொண்டர்கள் சத்தியாக்கிரகம் செய்கிறார்கள். இதுவரை தலைவர் ராமன் பிள்ளை உள்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் 4 பேருக்கு திருவிதாங்கூர் பீனல்கோடு 90ஆவது செக்ஷன்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட […]

மேலும்....