இயக்க வரலாறான தன் வரலாறு(246) : இந்தி திணிப்பிதற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்!

அய்யாவின் அடிச்சுவட்டில் …   கி.வீரமணி 4.1.1993 அன்று தமது 85 வயதிலும் போராட்டக் குணத்தோடு, கொள்கை நெறியோடும் நம்மோடு வாழ்ந்து உற்சாகமூட்டி வந்த அம்மா பட்டம்மாள் பாலசுந்தரம் (பாவலரின் வாழ்விணையர்) மறைவுற்றார் என்கிற செய்தியை தொலைபேசி வாயிலாக அறிந்து ஆறாத் துயரம் அடைந்தேன். அப்போது, தமிழ்நாட்டின் கடைகோடியில் நாகர்கோயிலில் தீவிரப் பிரச்சாரத் திட்டப் பயணத்தில் இருந்ததால், இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். பாவலர் பாலசுந்தரம் அவர்கள் இயக்கத்திலே ஆற்றிய அரும்பணி நாடறிந்தது. அவர் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்!

கவிஞர் கலி.பூங்குன்றன் எத்தனையோ பேராசிரியர்களை நாடு கண்டு இருக்கிறது. ஆனால், இனமானப் பேராசிரியர் என்று ஏற்றுக்கொள்ளத்தக்க _ போற்றிப் புகழத்தக்க _ வரலாற்றில் நிலைக்கத் தக்கவர் _ தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் செம்மாந்து நின்ற மானமிகு க.அன்பழகன் அவர்களே ஆவார்! நேர்கொண்ட பார்வை _ இரு பொருள் தரும் சொற்களைப் பேசாமல் -_ எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுதான் அவரின் அணுகுமுறையும் நடைமுறையுமாகும்! பதவிக்காக வளைவது _ குனிவது _ நழுவுவது […]

மேலும்....

நம்பிக்கை தரும் திரைப்படங்கள் : நாடோடிகள்-2

கலைமணி & இளையமகன் ஊரின் பிரச்சினைகளை தன் மேல் போட்டுக் கொண்டு செயல்படும் கதையின் நாயகன் ஜீவா (நடிகர் சசிகுமார்), தன் ஜாதித் தலைவர் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவரையும் சேர்த்தே எதிர்க்கக் கூடிய போராட்டக்காரர். அதனாலேயே அவருக்குப் பெண் தரத் தயங்குகின்றனர் _ சொந்த மாமா உள்பட பலரும்! சொந்த வாழ்க்கை இப்படி ஆகிறது எனினும் நண்பர்களுடனும், மூத்த செஞ்சட்டைத் தோழர் ஒருவருடனும், மருத்துவரான பெண் தோழர் செங்கொடி (அஞ்சலி)யுடனும் போராட்டங்களைத் தொடர்பவர். சமூக ஊடகத்தின் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : எது கடவுள்? எது மதம்?

தந்தை பெரியார் தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும் அவற்றின் அவதாரமென்றும், ரூபமென்றும் அதற்காக மதமென்றும், சமயமென்றும், அதற்காக மதாச்சாரியார்கள் என்றும், அதற்கு சமயாச்சாரியர்கள் என்றும் கட்டியழுபவர்கள் ஒன்று வயிற்றுப் பிழைப்பு புரட்டர்களாயிருக்க வேண்டும், அல்லது பகுத்தறிவில்லாதவர்களாகவாவது இருக்க வேண்டும் என்பதே நம் அபிப்பிராயம் என்பதாக பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றோம். அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ சொல்லப்படுபவையும் ஒரு சாமி என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும், […]

மேலும்....

தலையங்கம் : “கரோனா பரவாதிருக்க கோயிலுக்கு வரவேண்டாம்’’ என்பது வரவேற்கத்தக்கது!

சர்வ சக்தியுள்ள ‘கடவுள் இல்லை’ என்பது உறுதியானது! சீனாவில் ஏற்பட்ட ‘கரோனா வைரஸ்’ என்னும் தொற்று நோய், அங்கே லட்சக்கணக்கானவர் களைப் பாதித்ததோடு, மூவாயிரம் பேர்களுக்கு மேல் உயிர்க் கொல்லியாகவும் அமைந்தது _ மனித குலத்திற்கே ஏற்பட்ட மிகப்பெரிய அவலம்; துன்பமும், துயரமும் பொங்குமாங் கடல்போல் வாட்டுகின்றது! அந்நோய் தொற்றானதால் உலக நாடுகள், சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நுழைந்து, சுற்றுலா,  தொழில், பயணங்கள் இவைகளில் எல்லோரும் அஞ்சி வாழும் கொடுமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கூட்டமாகக் கூடுவதைத் தவிர்ப்பது, […]

மேலும்....