இயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு!

அய்யாவின் அடிச்சுவட்டில் … கி.வீரமணி 11.1.1992 அன்று சென்னை பெரியார் திடலில் “தடா சட்டமும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன். அப்போது வழக்கறிஞர் த.வீரசேகரன் அவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கை எடுத்துக்காட்டி பேசினேன். 16.1.1992 அன்று மாலை மாநில கழக கிராமப்புறப் பிரச்சாரச் செயலாளர் மல்லியம் கண்ணையன்  மாரடைப்பால் மரணமடைந்தார் என்கிற செய்தியைக் கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். அதேபோல் தஞ்சை பி.மகாதேவன் அவர்கள் திடீரென […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா?

* ஈ.வெ.ரா. வைக்கம் வீரர் அல்லர்! * ஈ.வெ.ரா. அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார். * அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன. * திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொது மேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது… எதிரிகளை உருவாக்கி, அவர்கள்மீது உச்சக் கட்ட வசைகளைப் பொழிந்து, அந்தக் கருமைச் சித்திரம் முன்பு தன்னை வெண்மையாகக் காட்டிக் கொள்ள […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா? (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா?

சிகரம் மைத்ரேயரே! சூரியன் சஞ்சாரஞ் செய்யும் தக்ஷிணாயண உத்தராயண எல்லைகளின் நடுவாகிய கிராந்தி விருத்தங்கள் நூற்றியெண்பத்துமூன்று, அம்மண்டலங்களிலேதான் சூரியன் உத்தராயணத்தில் ஏறுவதும் தக்ஷிணாயணத்தில் இறங்குவதுமான முந்நூற்று அறுபத்தாறு கதிகளினால் ஒரு வருஷத்தைக் கழிக்கிறான். சூரியனது தேரானது சூரியர்களாலும் ரிஷிகளாலும் கந்தர்வராலும் அப்சரசுகளாலும் இயக்கர்களாலும் சர்ப்பங்களாலும் ஏற்றப்பட்டிருப்பது. அந்த இரதத்தில் சித்திரை மாதத்தில் தாதா என்ற சூரியனும் கிரதஸ்தலை என்ற அப்சரசும், புலஸ்தியர் என்ற முனிவரும் வாசுகி என்ற சர்ப்பமும் ரதபிருத்து என்ற இயக்கனும் ஹேகி என்ற அரக்கனும் […]

மேலும்....

கவிதை : பொன்னாடு வெல்கவே!

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உண்டாயா நீ பொங்கல்? வீட்டிற் பால்பொங் கிற்றா? உட்காரப்பா உட்கார்! உற்றுக்கேள்! இங்கோர் பண் தழைந்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்! உன்றன் பழநாட்டார் உள்ளத்தின் ஒலி அதுதான் தம்பி! பண்டுதொட்டுத் திராவிடத்தின் வடவெல்லை என்று பகர்ந்துயர்ந்த விந்தியத்தின் இப்புறத்திலுள்ள எண் தவிர்ந்தார் எல்லாரும், “எங்கள் திரவிடந்தான் என்று விடுதலையடையும்” என்கின்றார் அன்றோ!   பனியில்லை; குளிரில்லை; இருள் கிழித்துக் கொண்டு பகலவன் தான் தலைகாட்டப் பல்காட்டி வாழ்த்தி இனியில்லை மடமை என ஆர்த்தாயே தம்பி […]

மேலும்....

முற்றம் : நூல் அறிமுகம்

நூலின் பெயர்: ஃ ஆயுத எழுத்து ஆசிரியர்: ஞா.சிவகாமி பதிப்பகம்: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை_40. செல்: 98403 58301 நூலாசிரியர் ஞா.சிவகாமி அவர்களின் ஒன்பதாவது நூலாகும். இதில் அவருடைய அனுபவம், பார்த்த மனிதர்கள், கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு உண்மையும் கற்பனையும் கலந்து சிறுகதையைப் படைத்துள்ளார். இதில் உள்ள 21 கதைகளில் சம காலத்தின் ஒரு சில அரசியல் நிகழ்வுகளையும் அக்கறையோடு தொட்டுச் செல்கிறார். ஒவ்வொரு சிறு கதைக்கும் முடிவில் […]

மேலும்....