ஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்!

கே:       ‘அண்ணாவின் அறிவுக் கொடை’ புத்தக வெளியீட்டு விழாவில் தாங்கள் ஆதாரத்துடன் பேசிய அண்ணாவின் கடைசிக் கடிதத்தில் வந்துள்ள கட்டுரையை ‘உண்மை’ இதழில் வெளியிடுவீர்களா?                 – சி.வாஞ்சிநாதன், சிங்கிபுரம் ப:           நிச்சயம்! வரும் இதழ் ‘உண்மை’க்காகக் காத்திருங்கள் _ அக்கட்டுரையைப் படிப்பதற்கு! கே:       அண்ணா அறிவாலயம் உள் அரங்கில் கலைஞருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள், வாழ்த்துப் பாக்களைப் பாதுகாக்க கருவூலம் அமைத்துள்ளது போல், பெரியார் திடலிலும் ஓர் அரங்கம் அமைக்க திட்டமுள்ளதா?                 – இரா.முல்லைக்கோ, […]

மேலும்....

சிறுகதை : அறுவடை

  பேரறிஞர் அண்ணா வக்கீல் வேணுகோபாலாச்சாரியார் அந்த ஊருக்கே ஒரு புதிர்! அவரைப் புரிந்து கொள்ளவே முடியாது _ பேச்சு அவ்வளவு குழப்பம் என்று பொருள் கொண்டு விடாதீர்கள் _ அவர் எப்படிப்பட்டவர் என்பதை, அவருடைய சொல், செயல், நினைப்பு, நிலைமை இவைகளைக் கொண்டு திட்டவட்டமாகத் தீர்மானித்து விடமுடியாது. திறமைசாலியா, கையாலாகாதவரா, வேணுகோபாலாச்சாரியார் எப்படிப்பட்டவர் என்று கூறிவிட முடியாது. பார் கிளப்பில், (வக்கீல்கள் சங்கத்தில்) கெட்டிக்காரண்டா வேணு! யாருக்கும் உதிக்காத ‘பாயிண்ட்’ அவனுக்குச் சுலபத்திலே உதிக்கிறது என்று […]

மேலும்....

வாசகர் கடிதம் : வாசகர் மடல்

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். டிச. 1-15, 2019 உண்மை இதழ் சுயமரியாதை நாள் – ஆசிரியரின் 87ஆம் ஆண்டு மலராக சிறப்பாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. ஈழத்தமிழர் வாழ்வுரிமை காக்கப்பட ஆசிரியரின் வேண்டுகோள் மனிதநேய உணர்வை ஊட்டுகிறது. ஆசிரியருடன் நெருங்கிப் பழகிய மருத்துவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், இயக்க முன்னோடிகள், தி.மு.க. முன்னணியினர் ஆகியோர் தொகுத்தளித்துள்ள ஆசிரியரின் சமுதாய, சமூகநீதி, அரசியல் தொடர்பான தொலைநோக்குப் பார்வைகள், இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி ஆசிரியர் என்பதை பத்திரிகை […]

மேலும்....

நூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்

(முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்’’ சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம் – நா.முத்துநிலவன்) மதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள் “நெருப்பினுள் துஞ்சல்’’ எனும் தொகுப்பாக வந்திருக்கிறது. வாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றி பெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய நல்ல முன்மாதிரி முயற்சி. பெரியார், […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!(5)

மரு.இரா.கவுதமன் காது, மூக்கு, தொண்டை மருத்துவம்: காது: காதில் ஏற்பட்டுள்ள மருத்துவ மாற்றங்களை அறியும் முன், காதின் அமைப்பை நாம் அறிந்துகொள்ள வேண்டும். காது, புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காது மடல், செவிக்குழாய், செவிப்பறை மூன்றும் புறச்செவியில் அமைந்துள்ளன. நடுச்செவியில் மிகவும் நுண்ணிய சுத்தி எலும்பு, பட்டை எலும்பு, லாட எலும்பு ஆகியவை அமைந்துள்ளன. சுத்தி எலும்பு (Malleus) செவிப்பறையை ஒட்டியிருக்கும். அதை ஒட்டி பட்டை எலும்பும்  (Incus), அதை ஒட்டி லாட எலும்பும் […]

மேலும்....