எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 56 ) : தந்தை பெரியாரின்றி போராட்டம் இல்லை!

 நேயன் உடனே, பெரியாரின் மனைவி நாகம்மையார், தோழர் எஸ்.இராமநாதன் அவர்களுடன் வைக்கம் வந்து சேர்ந்து, போராட்டத்திற்குத் தலைமை தாங்கி தொடர்ந்து நடத்தினர். தொடர்ந்து தமிழகத்திலிருந்தும் கேரளாவிலிருந்தும் ஏராளமான பெண்கள் இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டனர். ஒருமாத சிறைத்தண்டனைக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட பெரியார், மீண்டும் போராட்டம் நடத்தினார். எனவே, அரசு இதைக் கடுமையாகக் கருதி அவரைக் கைது செய்து ஆறுமாத சிறைத் தண்டனை விதித்துச் சிறையிலடைத்தது. வைக்கத்தில் தீவிரப் போராட்டத்தில் இருந்த பெரியாருக்கு ராஜாஜி ஒரு கடிதம் எழுதினார். […]

மேலும்....

கவிதை : நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்!

நாட்டுநடப் பெல்லாமே தலைகீ ழாக                 நல்லவர்கள் நடமாட நாணு கின்றார்; கேட்டினையே செய்வோர்தாம் பெருத்துப் போனார்                 கீழ்மையிலே புரள்வோரே மேலோர் ஆனார்¢ ஓட்டையுள குடத்தில்நீர் நிரம்பு மாமோ?                 ஒழுக்கமிலார் என்றைக்கும் திருந்த மாட்டார்! வாட்டத்தில் உழல்வோரின் வாழ்வில் மாற்றம்                 வரவேண்டும்; மறுமலர்ச்சி தோன்ற வேண்டும்! நேர்மைக்குப் புறம்பாக நடப்போ ராலே                 நிகழாது முன்னேற்றம் நாட்டில்; எல்லாச் சீர்மையுமே வெருண்டோடி விலகி நிற்கும்!                 சிறகொடிந்த பறவையெனச் சிதையும் வாழ்க்கை; வேர்களிலே […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (9)

மரு.இரா.கவுதமன் இதய நோய்கள்: 1.            பிறவிக் கோளாறு இதய நோய்கள் (Congenital Heart Diseases) 2.            அடைப்பிதழ்  (Valvular Diseases) நோய்கள் 3.            இதயத் துடிப்பு சீரின்மை  (Arhythemia) நோய்கள் 4.            இதயத் தமனி அடைப்பு நோய் (Coronary Heart Diseases) 5.            இதய செயலிழப்பு  (Heart Failure) நோய் என்று இதய நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. பிறவிக் கோளாறு இதய நோய்கள்: சில குழந்தைகள் பிறக்கும்போதே, இதயத்தின் அமைப்பில் குறைபாடோடு பிறக்கும். குறைபாடுகள் பலவகையில் இருக்கலாம். பொதுவாக “இதயச் சுவர்களில் […]

மேலும்....

சுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்!

அவசரச்  சட்டத்தின்  மூலம்  அமைக்கப்பட்ட  நீதிமன்றத்தின் தீர்ப்பு, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என்னும் புரட்சி வீரர்களான மூன்று இளைஞர்களுக்கும் 7.10.1930 அன்று மரண தண்டனை விதித்தது. இத்தண்டனையை லண்டனில் இருந்த பிரீவி கவுன்சில் உறுதி செய்தது. இந்திய வைஸ்ராயும் அதை உறுதி செய்தார். தூக்குத் தண்டனைக் கைதிகளின் அறையில் தூக்கிலிடப்படும் நேரத்திற்காகக் காத்திருந்த நாள்களிலும், பகத்சிங் கொஞ்சங்கூட அஞ்சவில்லை;  கலங்கவில்லை. வழக்கம்போல் படிப்பதும், எழுதுவதும், வாதிடுவதும், கலகலப்பாக நகைச்சுவை ததும்பப் பேசுவதுமாக இருந்தார். தன்னுடைய  மரண தண்டனையை  […]

மேலும்....

நம்பிக்கை தரும் திரைப்படங்கள் : கன்னிமாடம்

சமா.இளவரசன் – உடுமலை   நன்கு அறிமுகமான நடிகரும், அறிமுக இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான கன்னிமாடம் திரைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அழுத்தமான கதை, சீரிய திரைக்கதை, எளிய மாந்தர்கள், இயல்பான நடிப்பு என ஈர்ப்புக்கு ஏராளமான காரணங்கள்! சென்னையில் பட்டப்பகலில் நடந்த கொலை ஒன்று குறித்து காவல்துறை பரபரப்போடு தொடரும் படத்தில், கல்லூரிக் காலத்தில் காதலாகி, காதலன் கதிர் குடும்பத்தின் ஜாதி வெறி காரணமாக, கடும் எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் […]

மேலும்....