முற்றம் : ஆவணப்படம்

இந்தியாவின் தடை செய்யப்பட்ட காதல்   உடுமலைப்பேட்டை சங்கர் (கவுசல்யா), ஜாதியால் தாழ்ந்தவர் என்பதாலேயே பட்டப்பகலில், மக்கள் கூடியிருக்கும் போதே, கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இது போன்ற சூழலில் சம்பந்தப்பட்ட பெண்கள், சமூகத்தின் கொடூரமான இன்னொரு பக்கத்தைக் காணச் சகிக்காமல் தங்களை, தங்களுக்குள்ளேயே சுருக்கிக் கொள்வதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதனாலேயே எவ்வளவு கொடூரமான நிகழ்வாக இருந்தாலும், காலவெள்ளத்தில் நம் நினைவிலிருந்து அந்த நிகழ்வுகள் மறைந்து போகும்; இல்லையென்றாலும் மறக்கடிக்கப்பட்டுவிடும். சங்கரின் படுகொலை […]

மேலும்....

பெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி!

நரிக்குறவர் காலனியில் வசித்து வருகிறார் கௌசல்யா. அந்தப் பின்னணியில் இருந்துதான் தவ்வித் தவ்வி படித்து கல்வியில் உயர்ந்திருக்கிறார் விநாயகா மிஷன் நர்சிங் கல்லூரியில் படிக்கும் கவுசல்யா. தந்தை ராஜேந்திரனுக்கு பாசிமணி, ஊசி மணி, பலூன் விற்பதும் ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் கடைபோடுவதும்தான் முழுநேரத் தொழில். “எங்களால படிக்கவைக்க முடியல. நாங்களும் படிக்கல, இப்படியே இருந்துட்டோம். அவங்களாவது படிச்சு நல்லா இருக்கட்டும் என ‘ஜாலி ஹோம்ல’ தங்க வைச்சு படிக்க வைக்கிறாங்க’’ என கூறுகிறார். தான் படிக்க […]

மேலும்....

முதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்

நெ.முகிலன் மானமும் அறிவும் கொண்டு வாழ்பவனே மனிதனாவான். பகுத்தறிவு அற்றவன் விலங்குக்கு ஒப்பாவான். எதையும் பகுத்தாய்வு செய்வதே பகுத்தறிவின் இயல்பு. எப்பொருளையும் பகுத்துப் பார்த்து, ஆய்ந்து மெய்ப்பொருள் காண்பது பகுத்தறிவின் பயன். அறிவியல் முறைப்படி மெய்பிக்கப்படாத எதனையும் பகுத்தறிவு ஏற்காது. யார் எதைக் கூறினாலும் ஏன்? எதற்காக? எப்படி? என்று வினாக்களை எழுப்பி உண்மையைக் கண்டறிவான் பகுத்தறிவாளன். அந்த மூடநம்பிக்கையால் வரும் கேடுகள் பல. அவற்றுள் அடியில் சில: ஜாதி மூடநம்பிக்கை மேல்ஜாதி, கீழ்ஜாதி, தாழ்ந்த ஜாதி […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்!

மஞ்சை வசந்தன் தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர். அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது. அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக தை மாதத்தையும், முதல் தேதியையும் ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை, உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும் மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும். அறுவடைப் பண்டிகை இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்னவென்றால், விவசாயத்தையும் வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு […]

மேலும்....