விழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்!

புத்தகம் படிப்பது அறிவைத் தருவது, வளர்ப்பது மட்டுமல்ல. அது, படிப்பவரின் உடல், உள்ள நலத்தையும் வளர்க்கிறது.    ஒரு சிறந்த புத்தகத்தால் ஒருவருக்குள் இருக்கும் தனிமை உணர்வை விலக்க முடியும்; நிறைய மனிதர்களை அறிமுகப்படுத்த முடியும்; குழப்பங்களுக்கு விடை சொல்ல முடியும்; மனதுக்கு ஆறுதல் தர முடியும். அறிவியல்ரீதியாக இவை எப்படிச் சாத்தியம் என்பதையும், வாசிப்பால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்குகிறார் நரம்பியல் மருத்துவர் பிரபாஷ். அறிவியல் காரணங்கள் * புத்தகம் வாசிக்கும்போது, மூளையின் பின்பகுதி நரம்புகள் தூண்டப்படும். […]

மேலும்....

கவிதை நல்லது!

வாசிப்புப் பழக்கத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து யேல் பல்கலைக்கழகம் 2016ஆம் ஆண்டு ஆய்வொன்றை மேற்கொண்டது. ஏறத்தாழ 3,600 பேருக்கு மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு அவர்களின் ஆயுள்காலம் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. `பாடப் புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்களைவிட கதைப் புத்தகங்கள், கவிதைகள் சார்ந்த வாசிப்புகள்தான் மூளை வளர்ச்சிக்கு நல்லது எனக் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். பல கதாபாத்திரங்களைக் கொண்ட புனைவுகளை வாசிப்பவர்கள் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள் […]

மேலும்....