மாமேதை பெரியாரை மறப்பார் யாரே?

இம்மண்ணின் மக்களெல்லாம் அறிவு மானம் எய்தவேண்டித் தொண்டாற்ற அருட்கொ டையாய்தம்முழுமை வாணாளைத் தத்தம் செய்து தடைக்கற்கள் யாவையுமே தகர்த்துச் செல்லுவெம்புகரி யாய்வெகுண்டே உரிமைப் போரில் வெற்றியன்றி வேறெதுவும் கண்டி டாதசெம்பெரியார் கொள்கைதனைச் செயல் படுத்தச் சென்றவழி சென்றென்றும் நினைவு கூர்வோம்!இயக்கத்தின் தூண்களென இயம்பப் பட்டே இருந்தவர்கள் விட்டுவிட்டுச் சென்ற போதும்புயமாகச் செயல்பட்டோர் குற்றம் சொல்லி புறமேகி வன்துரோகம் செய்த போதும்அவயவங்கள் நோய்ப்பட்டு நொந்த போதும் அசைக்கலாகா இமயமென இயக்கந் தன்னைவியப்புற்றே இப்புவியோர் விள்ளும் வண்ணம் உயர்த்திட்ட பெரியாரை […]

மேலும்....

ஆசிரியர் கேள்வி -பதில்

கே: ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த அறிவுஜீவி என்கிற அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்துக்கு வலதுகரமா? உங்கள் கருத்து? – முருகன், புழல்ப: டில்லி காவி ஆதிக்கக் கட்சி டெபுடேசனில் (ஞிமீஜீணீவீஷீஸீ) அனுப்பியுள்ள இவருக்கான முகமூடி, அதிர்ச்சித் தாங்கி (ஷிலீஷீநீளீ ணீதீஷீக்ஷீதீமீக்ஷீ). பா.ஜ.க.வின் பிளேபேக் சிங்கர்.கே: சமஸ்கிருதம் எந்த மாநிலத்திலுமில்லை, மக்கள் பேச்சு வழக்கிலுமில்லை. அப்படியிருக்க எல்லா மாநிலங்களிலும் செய்தி ஒளிபரப்புவது அசல் அடாவடித்தனம் அல்லவா? – குமரன், குன்றத்தூர்ப: திணிப்பு என்பதற்கு அப்பட்டமான பொருள் விளக்கம் இது! மக்கள் வரிப்பணத்தில் ஆரியம் […]

மேலும்....

ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார்

பெரியாரில் பெரியார்தம் நிலை விளக்கம்போலத் தந்தை பெரியார் அவர்கள் அவ்வப்போது வெளியிட்டிருக்கும் கருத்துகள் அவர் தம் உள்ளத்தைக் காட்டும் பளிங்கு முகங்களாகத் திகழக் காண்கிறோம். அப்பளிங்கு முகங்களில் காணப்படும் அவர் தம் அகச் செவ்வியை நோக்குந்தோறும் அவர் தம் பண்பாடு அம்மவோ! எத்துணை விழுமியது என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.என் உடல் நிலையும் எனது முடிவை அவசரப்படுத்துகிறது. நான் (எனது உடல் நிலை) படுக்கையில் இருக்கவேண்டியவன். ஆனால் என்னால் படுக்கையில் இருக்க முடியவில்லை. ஏனெனில் படுத்துக் கொண்டே […]

மேலும்....

வாசகர் மடல்

  ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கம். நான் உண்மை நவம்பர் 16-30, 2020 படித்தேன். அதில் அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (256) படித்தேன். அதில், பிரபஞ்சன் அவர்கள், கோயில்கள் தோன்றியது ஏன்? அருமையான புத்தகம் என்கிறார். அந்தப் புத்தகத்தை மீண்டும் படித்தேன். பிரபஞ்சன் கூறியுள்ளபடி ஆசிரியருக்கு 300 டாக்டர் பட்டம் தர மிகவும் பொருத்தமான சமூகநீதிக் காவலர் என்பதை மெய்ப்பிக்கும் மிகப் பெரிய ஆய்வுப் புத்தகம் அது என்பதில் அறிஞர்களுக்கு எள்ளளவும் அய்யமிருக்காது. […]

மேலும்....

வாய்மைப் போருக்கு என்றும் இளையார்…

முனைவர் வா.நேரு தந்தை பெரியாரின் நினைவு நாள் டிசம்பர் 24. தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார், தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொண்டார் என்று தனக்கே உரித்தான பாணியில் சொன்னது மட்டுமல்லாது, தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதையுடன், குண்டுகள் முழங்க அடக்கம் செய்ய வழிவகுத்தார். தந்தை பெரியார் அவர்கள் உடல்ரீதியாக தனது சுற்றுப்பயணத்தை நிறுத்தி 47 ஆண்டுகள் கடந்துவிட்டன.. ஆனால், அவர்தம் கொள்கைச் சுற்றுப்பயணம் இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, […]

மேலும்....