ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மோடி – பா.ஜ.க.வின் 100 நாள் மத்திய ஆட்சி பற்றி தங்களது மதிப்பீடு?_ நாத்திகன் சா.கோ., பெரம்பலூர். பதில் : மோடியின் 100 நாள் மத்திய ஆட்சி _ வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றம் என்பது உத்தரகாண்ட் இடைத்தேர்தல், மற்றும் உ.பி., பீகார்_கர்நாடகா முதலிய பல மாநில இடைத்தேர்தல் முடிவுகள் மூலமே சுவரெழுத்து. குறிப்பாக விலைவாசி கட்டுப்படுத்தப்படாதது, 107 சதவிகிதம் பஞ்சப்படி அதிகரிப்பு, வேலைவாய்ப்புத் துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏதும் இல்லை; கேள்வி : விவசாயிகள் மகிழ்வடையும் […]

மேலும்....

எது தமிழர் திருமணம்? (5)

பிரம்மனின் கயமை சிவன் திருமண சப்தபதி சிறப்பு வாய்ந்தது. பிரமன்தான் புரோகிதர். மந்த்ரங்களைக் கூறி நெய்யை ஊற்றித் தீயை வளர்த்துக் கொண்டே இருந்த நிலையில் மணமக்கள் ஏழு சுற்று சுற்றிவரத் தொடங்கினர். தீ தன் சேலையில் பற்றிக் கொள்ளக் கூடாதே என்கிற தடுப்பு முயற்சியாக மணமகள் தன் புடவையைச் சற்று உயர்த்திப் பிடித்தவாறு நடந்தாள். அதனால் அவளது பாதத்தின் ஒரு பகுதியும் கால்கட்டை விரலும் தெரிந்தது. புரோகிதப்  பார்ப்பனரின் கண்களில் கட்டைவிரல் தென்பட்டது. கட்டை விரலின் கவினுறு […]

மேலும்....

கவிதை வரைக…

காலத்தைக் காட்டும் கைக்கடிகாரம்கட்டியதற்கு கையை வெட்டிய வெறியர்களே!கடந்த காலத்திலே உன் பாட்டனும்இடுப்பிலே துண்டைக் கட்ட முடியாதே!கோவில் குளத்திற்குச் செல்ல முடியாதேஅதை மாற்றியது பெரியாரெனத் தெரியுமோ?தவறு உன் வளர்ப்பிலுள்ளதுஅன்பு, அறிவை ஊட்ட வேண்டிய குடும்பமோஜாதி எனும் நச்சுப்பாலை ஊட்டிவிட்டதோ?இன்னும் ஜாதி எனும் கத்தியைத் தீட்டாமல்மனிதநேயம் எனும் புத்தியைத் தீட்டுதோழன் ரமேஷின் கையில் கடிகாரத்தைக் கட்டு. –  க.அமிர்தசேகர், தூத்துக்குடி நச்சுச் செடியை மாணவர் மனதில்நட்டு வைத்தது சமூகத்தின் குற்றம்!வெட்டுப்பட்டவன் இரத்தம் என்ன ஜாதி?வெட்டியவன் இரத்தத்திலும் இல்லை ஜாதி!ஆபத்தில் உயிர்காக்க […]

மேலும்....

உலகம் யாருக்கு

புதுமை இலக்கியப் பூங்கா :

டிரியோ… டிரியோ… டிரியோ… டிரியோ!

ஆடிக்கொண்டிருந்தாள் அவள். அஞ்சான் அதை ரசித்துக் கொண்டிருந்தான். ஆண்டையின் குரல் அவனை மாய உலகிலிருந்து களத்துமேட்டுக்கு இழுத்து வந்தது.
டேய்! பொழுது சாயுதடா. நெல்லைக் குவிங்க… என்று நீண்டதொரு கனைப்பைத் தந்துவிட்டு, அங்காடிக் கூடையைப் பார்த்தார்.

மேலும்....

ஜாதி – தனி மனித வழிபாடு – பெண்ணடிமை தமிழ் சினிமா: எங்கே செல்லும் இந்தப் பாதை? – 2

– கை.அறிவழகன் 1) தனி மனித வழிபாடு நோக்கிய நாயகத் தோற்றம். முதல் காரணி எப்படியான தாக்கம் விளைவிக்கிறது அல்லது எப்படி உள்ளீடு செய்யப்படுகிறது என்பது குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் ஏறக்குறைய எல்லா வேலைகளையும் அவர்களே செய்து முடித்து விடுகிறார்கள். தன்னுடைய தந்தையை இழிவுபடுத்தும் ஒரு குழுவை அல்லது தனி மனிதனை ஒரு கல்லெறிந்து தாக்குவதில் தொடங்கி கட்டிடங்களை நொறுக்கி, கடைகளைப் பந்தாடி, பேருந்துகளைத் துரத்தி, ரயில் வண்டிகளின் மீதேறி […]

மேலும்....