சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : சித்தர்களும் சமூகப் புரட்சியும்

நூல்: சித்தர்களும் சமூகப் புரட்சியும் ஆசிரியர்: வழக்குரைஞர் இரா.சி.தங்கசாமி பதிப்பாளர்: மொழிஞாயிறு பதிப்பகம், பால்நகர், சங்கர்நகர் – 627 357. திருநெல்வேலி மாவட்டம். அலைபேசி : 93603 58114 பக்கங்கள்: 200 விலை: ரூ.500/- சென்ற இதழின் தொடர்ச்சி (2) ‘சித்தர்களும் சமூகப் புரட்சியும்’ என்னும் இந்நூலில் கி.மு.600_300ஆம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் தோன்றியதாகக் கருதப்படும் சித்தர்களின் இலக்கியங்களை மய்யமாகக் கொண்டு, அவர்களுடைய மய்ய இயங்கியலாய் பகுத்தறிவுடன் கூடிய சமூக சிந்தனைகளையும், அக்கால கட்டத்தில் அவர்கள் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : இரட்டை வேடம் அம்பலமாகும்!

கே:       வேளாண் உற்பத்திச் செலவைப் போல் இரு மடங்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று கடந்த ஆண்டு வாக்குறுதி அளித்தவர்கள் அதை நிறைவேற்றாத நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதே வாக்குறுதியைக் கூறியுள்ளது சரியா? தங்கள் கருத்து என்ன?         – ஆ.சே.அந்தோனிராஜ், தென்காசி ப:           பல பட்ஜெட் உரைகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்துவோம் என்பது ஒரு தொடர் அறிவிப்பாக மட்டுமே உள்ளது! செயலாக மலர்ந்தபாடில்லை. இருந்திருந்தால் விவசாயிகள் இப்படி பனி, மழை பருவ காலத்திலும் […]

மேலும்....

பெண்ணால் முடியும் : கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர்

உலக வழக்கில் மக்களை ஆண், பெண் என்கிற பாலின அடையாளத்தைப் பொருத்து அழைத்து வருகிறோம். அவ்வாறு பொருந்தாத ஒருவரை மூன்றாம் பாலினம் என்கிறோம்.  அவர்களை மூன்றாம் பாலினமாக தமிழ்நாடு அரசு முதன்முறையாக கொண்டாடியது கலைஞர் ஆட்சியில்தான். அவர்களுக்கு ஒரு நிலையான அங்கீகாரத்தோடு பெருமைமிகு பெயராக ‘திருநங்கை’ என்னும் பெயரிட்டு அடையாளப்படுத்தினார். அது இன்றும் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக மாறி பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் கேரளாவில் முதல் திருநங்கை மருத்துவராக படித்து முன்னேறி உள்ளார் டாக்டர் பிரியா. மூன்றாம் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (72) : திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தாரா?

நேயன்   தமிழர் என்னும் சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர். இது உண்மையா? அல்லது மோசடிப் பிரச்சாரமா? ஆதாரங்களுடன் விளக்க விரும்புகிறோம். 1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்னும் அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்னும் சொல்லை திரு.ஜான் ரெத்தினம் அவர்களும் பண்டிதர் […]

மேலும்....

பொருளாதாரம் – சாமானியனின் கேள்விகள்?

2014இல் அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள். அதே 2014ஆ-ம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 ‘தாய் பாட்’ கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 ‘தாய் பாட்’ தான் கிடைக்கும். அமெரிக்கா, தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014ஆம்- ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்குச் […]

மேலும்....