சிந்தனை:நீட் ;முதல் அமைச்சர் நரேந்திர மோடி – பிரதமர் நரேந்திர மோடி இடையிலான முரண்பாடு!

கவிஞர் கலி.பூங்குன்றம் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி அவர்கள் ‘நீட்’டைக் கொண்டு வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார். ஆனால், இதே மோடி அவர்கள் குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்தபோது ‘நீட்’டைப் பற்றிய அவரின் நிலைப்பாடு என்ன? இதோ ஆதாரம் பேசுகிறது: மோடியின் இரட்டை வேடம்: முதல்வராக இருந்தபோது ‘நீட்’ எங்களுக்குத் தேவையில்லை என்று கூறியவர். அகமதாபாத், நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதன் […]

மேலும்....

சீர்திருத்தம் என்றால் குமட்டலா?

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் அட்டையிலே இப்படி தொலைநோக்கு என்பதில் பழைய ‘ர்ஹ்’        இடம்பெற்று இருக்கிறது. சட்டப்படி இது தவறு. தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர் அரசு தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்போர் இதனை நடைமுறைப்படுத்திப் படித்தும், எழுதியும் வருகின்றனர். ஆனால், பா.ஜ.க.வுக்கு மட்டும் குமட்டுகிறது. காரணம் இதனை அறிமுகப்படுத்தியது தந்தை பெரியார். பெரியார் மண்ணில் கால் ஊன்ற கால்கடுக்க முயற்சிக்கும் இந்தக் காவிகள் என்னும் நச்சுச் செடி முளைக்க […]

மேலும்....

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பயங்கரம்!

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் (பக்கம் 10) பள்ளிப் பாடத் திட்டத்தில் தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் சொல்லிக் கொடுக்கப்படுமாம். அப்படியென்றால் தேவாரத்தில் இடம்பெறும் இந்தப் பாடலும் இடம் பெறுமோ? மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த் திண்ணகத் திருவாலவா யருள் பெண்ணாகத் தெழில் சாக்கியர் பேயமண் பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே! மதுரைவாழ் சிவனை நோக்கி திருஞானசம்பந்தன் என்னும் சின்ன பையன் (வயது 18இல் மரணம் அடைந்து விடுகிறான்) தேவாரத்தில் என்ன பாடுகிறான்? பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் […]

மேலும்....

சில துளிகள்

1. மீனவர் நலன் பாதுகாப்புப் பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை பேசுகிறது. அதானிகளுக்குக் கண்டெய்னர் துறைமுகங்களைத் தாரைவார்த்த பா.ஜ.க. அரசு எந்த முகத்தோடு இந்த வாக்குறுதியைக் கொடுக்கிறது? நிலைமை என்ன என்றால் ஒரே ஒரு மீனவரைக்கூட பா.ஜ.க. கூட்டணியினர் முகத்துக்கு  முகம் கொடுத்துப் பேச முடியாது. அந்த அளவுக்குப் பா.ஜ.க. மீது அடங்காக் கோப வெறியோடு மீனவர்கள் உள்ளனர்.  2. விவசாயிகளின் நலன்களுக்காக மோடி அரசு விடும் கண்ணீர் நாடகத்தன்மையானது.  மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றிவிட்டு எப்படி […]

மேலும்....

இலக்கியம்: திராவிட இயக்கச் சிந்தனையே என் எழுத்தின் அடிப்படை!

தமிழ் எழுத்தாளர்களிடையே தன் அரசியல் அடையாளத்தை மறைக்காமல் கட்சிக் கறை வேட்டியுடன் இலக்கிய மேடைகளில் பங்கேற்பவரும், அவர் சார்ந்த கட்சி மட்டுமின்றி மற்ற தமிழ் வாசகர்களுக்கிடையேயும் பெரும் வரவேற்பும், நட்பும் கொண்ட எழுத்தாளர் வெ.அண்ணாமலை என்கின்ற இமையம் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது _ அவர் எழுதிய ‘செல்லாத பணம்’ நாவலுக்காகக் கிடைத்திருப்பது தமிழக வாசகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த இமையத்தின் முதல் […]

மேலும்....