வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
தாசர் தாஸ என்று வடமொழியில் சொல்லப்-படினும் இது வடமொழியன்று. தாஹி என்று பார்சி மொழியில் வழங்குவதால் இது பார்சி மொழியாகிவிட்டது.தாதர் என்ற தூய தமிழ்ச் சொல்லையே ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்-அதாவது ஆரியர் நாவலந் தீவில் நுழைவதற்கு முன் -வடவராலும், பார்சிக்காரராலும் தாஸ, தாஹி என எடுத்தாளப்பட்டது என அறிதல் வேண்டும். தாத்தல்_-கொடுத்தல், இது தாத்து என்று இன்றும் வழங்குகிறது. அன்றியும் தாதம் என்றும் கொடுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. இதன் முதனிலை தா என்பதைக் காண்க […]
மேலும்....