செய்யக் கூடாதவை

டிசம்பர் 16-31

உருளைக்கிழங்கோடு ஆப்பிள் பழத்தை வைக்கக் கூடாது

உருளைக்கிழங்கோடு ஆப்பிள் பழத்தை சேர்த்து வைத்தால், ஆப்பிளில் உருவாகும் எத்திலின் வாயுவால் உருளைக்கிழங்கு பாதிக்கப்படும். உருளைக்கிழங்கின் சுவை கெடும்.

ஆப்பிளோடு சேர்த்து வைக்கப்படும் உருளைக்கிழங்கு விரைவில் கெடும், மேலும், உருளைக்கிழங்கின் பக்கத்தில் உள்ள ஆப்பிளின் சுவையும் கெடும்.

சிறுநீரகக் கல் தடுக்க இவற்றைச் சாப்பிடக்கூடாது:

சிறுநீரகத்தில் கல் உருவாகிச் சிலருக்குப் பெருந்தொல்லையைத் தரும். இதை நீக்க அல்லது தடுக்க முறையான உணவுப் பழக்கம் கட்டாயம்.

1.    பிட்ஸா, பர்கர், ஃபாஸ்ட்புட் சாப்பிடக்-கூடாது.
2.    உப்பு, காரம் அதிகம் சாப்பிடக் கூடாது.
3.    சாக்லேட், டீ, காபி சாப்பிடக் கூடாது
4.    இனிப்பு அதிகம் சாப்பிடக் கூடாது.
5.    பால் பொருள்களை அதிகம் சாப்பிடக் கூடாது.
6.    தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.
7.    இறைச்சி, மீன் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
8.    கீரை அதிகம் சாப்பிடக்கூடாது.
9.    தண்ணீர் நிறைய (ஒரு நாளைக்கு 2 லிட்டர்) குடிக்க வேண்டும்.
10.    வாழைத்தண்டு சாப்பிட வேண்டும்.
11.    தர்ப்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை, பழச்சாறுகள் சாப்பிட வேண்டும்.

முகப்பருவைக் கிள்ளக்கூடாது:

முகப்பரு வந்தவர்கள் அதை அழுத்தி அல்லது கிள்ளி உள்ளிருப்பதை எடுப்பார்கள். அவ்வாறு எடுப்பது சரியன்று. காரணம், அவ்வாறு செய்வதால் சிலருக்கு முகம் வீங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு கருப்புத் தழும்பாக மாறும்.

பரு உள்ளவர்கள் சோப்பைப் பயன்படுத்தக்கூடாது. சிகைக்காய் பொடியைத் தண்ணீரில் கலந்து பசை போல முகத்தில் தேய்த்துக் கழுவலாம். பாசிப் பருப்பு மாவை முகத்தில் தடவி கழுவலாம்.

சரியாக வேகாத அசைவ உணவுகளை உண்ணக்கூடாது:

காய்கறி, கீரைகளை அளவோடு வேக வைத்து உண்ண வேண்டும். ஆனால், அசைவ உணவுகளை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும். இல்லையென்றால் செரியாமை, தொற்றுநோய் பரவல் போன்ற கேடுகள் ஏற்படும்.

வாசனைப் பொருள் கலந்த உணவுகளை உண்ணக்கூடாது. அது நலக்கேடு என்பதோடு, செரியாமையையும் அது ஏற்படுத்தும்.

அடிக்கடிக் கோபப்படக்கூடாது:

அடிக்கடிக் கோபப்பட்டு மன இறுக்கம் அடைகின்றவர்களுக்குச் செரியாமை, குடற்புண், இருதய நோய், இரத்தக் கொதிப்பு போன்ற கேடுகள் ஏற்படும். எனவே, மன உளைச்சல், கோபம் இவற்றை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் பதற்றப்படு-வதும், கோபப்படுவதும் கூடாது.

இளநீரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது:

இளநீர் உடலுக்குப் பலவிதமான நன்மை-களை அளிக்கக் கூடியது. வெய்யில் காலத்திற்கு உகந்தது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, உடல்நலம் காக்கும்.

ஆனால், இளநீரைக் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காரணம், இளநீரிலுள்ள அமிலத் தன்மை குடலில் புண்ணை உண்டாக்கும். காலை உணவு உண்ட பின் ஒருமணி நேரம் கழித்து இளநீர் பருகுவது ஏற்றது.

தூங்கும் அறையில் வெளிச்சம் கூடாது:

தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும். வெளிச்சம் இருந்தால் மூளை-யிலுள்ள மெலட்டோனின் என்ற சுரப்பியின் செயலைக் குறைக்கும். மெலட்டோனின் செயல்படுவது குறைந்தால் தூக்கம் கெடும். தேவையெனில் மங்கலான நீலநிறப் பல்ப்பை எரிய விடலாம். தூங்கும் முன் அதிக நீர் அருந்தக் கூடாது. அது தூக்கத்தைக் கெடுக்கும்.

படுத்துக் கொண்டே லேப்டாப்பில் வேலை செய்யக் கூடாது. அது மன இறுக்கத்தை உண்டாக்கி தூக்கத்தைக் கெடுக்கும். படுத்துக் கொண்டே தொலைக்காட்சியைப் பார்ப்பதும் இப்பாதிப்பை உருவாக்கும்.  மாலை 6 மணிக்கு மேல் காபி, டீ, மது, புகை பிடிப்பதால் தூக்கம் கெடும். எனவே, இவை கூடாது. ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *