ஆசிரியர் பதில்கள்

ஊடகங்களின் பொய்யான கருத்துத் திணிப்பு முறியடிக்கப்படும்! 1. கே : தங்களின் தேர்தல் பரப்புரைப் பயணம் – மக்கள் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறதா?  – சு. கார்த்திகேயன், சேலம். ப : மகிழ்ச்சியோடு, இந்தியா – தி.மு.க. கூட்டணி மக்களின் கொள்கைக் கூட்டணியாக வெற்றிபெறுவதற்கும் பாடுபடுவதற்கும் பெருமக்கள் ஆதரவு பரவலாகவே எழுச்சியுடன் காணப்படுகிறது. ஜூன் 5ஆம் தேதிக்குப் பிறகு, பி.ஜே.பி., மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாகவே இது அமையும் என்பதும் ‘பளிச்’சிடுகிறது!” 2. கே : காங்கிரஸ் […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்…. – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

இந்தக் காணொலி மூலம் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு காலத்தில் எது ஒன்று சொன்னாலும், இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் இல்லை என்றார்கள். அப்படி என்றால், ராக்கெட் சைன்ஸ் என்பது மிகவும் கடினம் என்ற அர்த்தத்தில் சொன்னார்கள். நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா – பந்தயக் குதிரைகளாக இப்பொழுது நிலவிற்குப் போவதும், செவ்வாய்க் கோளுக்குப் போவதும் உலக நாடுகளுடைய இளைஞர்களுக்கு இணையாக, நம் நாட்டு இளைஞர்களும் போகிறார்கள் என்று. அடுத்து வரக்கூடிய தமிழ் இளைஞன் – […]

மேலும்....

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

நெருப்புவரிப் பாட்டெழுதி நிமிர்ந்து நின்றே நிலைகுலைந்த தமிழினத்தின் மீட்சி நாடிப் பெரும்புரட்சிக் கருத்தியலை விதைத்தார்! தந்தை பெரியாரின் சிந்தனைகள் தம்மை எல்லாம் எரிமலையாம் தீக்குழம்பில் இணைத்துத் தோய்த்தே இடர்நீக்கும் பகுத்தறிவு யாழை மீட்டித் திராவிடத்தின் மாண்பெல்லாம் வரலா றாக்கித் திருப்புமுனை பாட்டுலகில் மிளிரச் செய்தார்! ஆரியத்தின் சூழ்ச்சிகளைத் தமிழர் கூட்டம் அறிந்திடவே பண்ணிசைத்தார்! அடிமைப் போக்கை வீரியமாய்க் கனன்றெதிர்த்தார்; மதங்கள் சாதி வேண்டாத மூடநெறி மடமை வீழச் சீரியநற் சீர்திருத்தப் பாக்கள் மூலம் செம்மாந்த புரட்சியினை நடவு […]

மேலும்....

மொழி பெயர்ப்புப் பணியில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ! – முனைவர்.வா.நேரு

இன்றைய யுகம் என்பது செயற்கை நுண்ணறிவு யுகம். கணினி யுகம், இணைய உலகம் எல்லாம் கடந்து செயற்கை நுண்ணறிவு உலகமாக இன்றைய உலகம் மாறியிருக்கிறது. 1955ஆம் ஆண்டில் ஜான் மெக்காதே என்பவர்தான் இந்தச் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லைப் பயன்படுத்திய இவரே செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப்படுகிறார். 1955இல் முதன்முதல் இது பற்றி விளக்கிய அறிவியல் கருத்தரங்கத்திலேயே செயற்கை நுண்ணறிவின் நோக்கங்களில் ஒன்றாக ‘இயந்திரங்களை மொழியைப் பயன்படுத்தச்செய்வது’ என்பதைக் குறிப்பிடுகின்றார். 2024, மார்ச் 31 அன்று இணையம் […]

மேலும்....

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : சமூக நீதி பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை ! – கி. தளபதிராஜ்

நடைபெற இருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. 1947க்குப் பிறகு எத்தனையோ தேர்தல்களை இந்திய ஒன்றியம் சந்தித்திருந்தாலும், இந்தத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படுகிற அளவிற்கு சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டை ஆளும் பா.ஜ.க., ஜனநாயகத்தை முற்றிலுமாக அழித்து ஒழித்து ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. காலம் காலமாய்ப் போராடிப் பெற்ற சமூக நீதியை சவக்குழிக்கு […]

மேலும்....