மறுப்பிலக்கியம் மாற்றிலக்கியம் திராவிட இலக்கியம் – எழுத்தாளர் இமையம்

பொதுவாக அரசியல் சூழலும் சமூகச் சூழலும்தான் புதிய இலக்கியப் போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில்தான் மார்க்சிய சிந்தனை உலகெங்கும் பரவியபோது, அச்சிந்தனையை முன்னிறுத்தும் விதமாக இலக்கியங்கள் எழுதப்பட்டன. கருப்பின மக்களுடைய போராட்டங்கள் வலுப்பெற்றபோது, கருப்பின மக்களுடைய வாழ்க்கை இலக்கியங்களாக எழுதப்பட்டன. பெண் உரிமைகள் குறித்த உரையாடல் ஆரம்பித்ததும் உலகெங்கும் பெண்ணிய இலக்கியங்கள் எழுதப்பட்டன. இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தின் தாக்கமும், காந்திய சிந்தனையும் வலுப்பெற்றபோது, அது சார்ந்த இலக்கியங்கள் எழுதப்பட்டன. அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி எழுந்த அரசியல் விவாதங்களின் […]

மேலும்....

தலைமுறைக்காக தண்ணீரைச் சேமியுங்கள்

கேப் டவுன் தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுன். அதன் அரசாங்கம் ஏப்ரல் 14, 2023க்குப் பிறகு தண்ணீர் வழங்க இயலாமையைக் காட்டியதால், உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டது. அங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல் வழங்கும் நிலையங்களுக்குச் சென்று பெட்ரோல் வாங்கும் விதம் போல கேப்டவுனில் 25 லிட்டர் தண்ணீர் கேன்களில் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மேலும் தண்ணீர் கேட்பவர்களையோ, கொள்ளையடிப்பவர்களையோ சமாளிக்க […]

மேலும்....

இட ஒதுக்கீடும் பார்ப்பனரல்லாதார் மன நிலையும் ! – குமரன்தாஸ்

அண்மையில் காரைக்குடியில் ஒரு கல்லூரியில் மாணவர்களுடன் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நடத்திய கலந்துரையாடலின் போது மாணவர் ஒருவர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். அது வழக்கமானதும் தொடர்ந்து பலராலும், ஒரே ஒரு கிராமத்திலே, ஜென்டில்மேன் போன்ற பல திரைப்படங்களிலும் கேட்கப்பட்டு வருகின்றதுமான ஓர் கேள்விதான்! ‘‘ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்களே பள்ளியில் மாணவர்களிடம் ஜாதியைக் கேட்டு அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ஆதரிப்பது ஏன்?’’ என்ற கேள்வி தான் அது. (இதே போன்றதொரு கேள்வியை சென்னை […]

மேலும்....

செவ்வாய் – ஆறு. கலைச்செல்வன்

“நாள்தோறும் இரவு நேரத்தில் வானத்தையே உற்று நோக்கிகிட்டு இருக்கியே. என்னதான் பார்க்கிறாய்? எனக்கும் கொஞ்சம் காட்டேன்,” மாதவன் அருகில் வந்து கேட்டான் அவன் நண்பன் பாபு. “வா பாபு”, என்று இரவுப் பொழுதில் தன் வீட்டுக்கு வந்த பாபுவை வரவேற்றான் மாதவன். அப்போது அவன் தன் வீட்டு மாடியில் நின்றுகொண்டு வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். மாடியில் ஒரு தொலைநோக்கியையும் அமைத்திருந்தான். அதன் வழியாகவும் வானில் ஒளிரும் கோள்களையும், நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். “நீயும் வானத்தைப் பாரேன். எவ்வளவு […]

மேலும்....

சவு(ள)கிதார் உறங்கச் சென்று விடுவார் ! – சே.மெ. மதிவதனி

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களைச் சரிசமமாக நடத்துவது என்பதும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் ஓர் அரசின் ஜனநாயகக் கடமை ஆகும். கடந்த பத்து ஆண்டுகளில் பி.ஜே.பி. ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி நிற்கிறது. பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என்று வயதைக் கடந்த அனைத்து பெண்களும் ஏதாவது ஒரு வகையான பாலியல் சீண்டல்கள், வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் மட்டுமா இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன? எல்லா பகுதிகளிலும் தானே […]

மேலும்....