ஆசிரியர் பதில்கள்

சேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்! 1. கே: சேகுவேராவின் மகள் தங்களைச் சந்தித்த நிகழ்வில் தாங்கள் குறிப்பிடத்தக்க செய்தியாக எதைக் கூற விரும்புகிறீர்கள்?                                                                           […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (115)

– நேயன் 1921 இல், 612 பெண் குழந்தைகள் விதவைகள். அவர்களின் வயது ஒன்றுக்கும் கீழே. இந்தக் குழந்தைகள் அனைவருமே இந்துக்கள், 498 விதவைக் குழந்தைகளின் வயது ஒன்றிலிருந்து இரண்டு வரை. இரண்டிலிருந்து மூன்று வயதுக்குள்ளான விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை -_ 1280. மூன்றிலிருந்து நான்கு 2863. நான்கிலிருந்து அய்ந்து 6758. அய்ந்திலிருந்து பத்து 12,016. இவை, மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள். உண்மைத் தொகை, இதற்குப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பதை மிக எளிதாக ஊகிக்கலாம். […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றின் கொள்கலன் அவர். ஆரியத்தின் கடும் எதிரி; அவர் எழுதிய ஒப்பியன் மொழி நூலின் முகவுரைப் பகுதி ஒன்று போதும்_- ஆரியத்தின் ஆணிவேர் முதல் உச்சந்தலைவரை உறிஞ்சி எடுப்பதற்கு! அதன் காரணமாகவே ஆரியப் பகைவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவர். “திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’’ என்னும் ஆய்வுக் கட்டுரை சாதாரணமானதல்ல! 23 மொழிகளைக் கற்றுத் துறைபோன மொழிக்கடல் அவர்! மொழியியல், சொற் பிறப்பியல், சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி, மொழி ஒப்பீடு, வரலாறு, […]

மேலும்....

அண்ணாவிடம் அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய பாடம்

– சிகரம் அறிஞர் அண்ணா ஏழ்மையில் எளிமையாய்க் கற்று உயர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் ஆனவர். இன்றைய அரசியலில் வட்டச் செயலர்கூட அல்ல ஓர் ஊரின் கிளைச் செயலர்கூட ஆடம்பரமாய், பந்தா காட்டி, ஆட்கள் புடைசூழ ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அவரவர் திறமைக்கு ஏற்பச் சுருட்டுகின்றனர்.ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்த அண்ணா எப்படி நடந்துகொண்டார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடமாகப் படிக்க வேண்டும். வேண்டியவருக்குச் சலுகை காட்டாத நேர்மை . அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது திரு. சி.வி.இராசகோபால் அவர்கள் […]

மேலும்....

வைத்திய வள்ளல் ஈ.வெ. கிருஷ்ணசாமி

மறைவு – 04.02.1950 வைத்தியவள்ளல், கருணைக் கடல் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தந்தை பெரியாரின் அண்ணன் ஆவார். எந்த நேரமும் புன்முறுவல் பூத்த முகத்துடன் அன்போடு இரு கை நீட்டி வரவேற்று உபசரிக்கும் குணம் கொண்டவர். ஈரோட்டில் தனது இல்லத்தில் தனக்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. 25 ஆண்டுகளாக அவர் வைத்திய சாலையில் மிகுந்த பற்றுக்கொண்டவராகவும், வெகு தாராளமாகச் செலவு செய்யக்கூடியவராகவும் இருந்துள்ளார். தந்தை பெரியார் அவர்கள் குமுறும் எரிமலை என்றால், பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் […]

மேலும்....