சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை

அய்.நா. பொதுச்சபையால் 10.12.1984 அன்று ஏற்கப்பட்டு 26.6.1987 அன்று நடைமுறைக்கு வந்த இந்த உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்: இந்த உடன்படிக்கையில் பங்கேற்கும் அரசுகள்: அய்.நா. அமைப்புத் திட்டத்தின் தத்துவங்கள், நோக்கங்கள் ஆகியவை சொல்வது போல மானிடக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரித்தான மாற்ற முடியாத சமானமான உரிமைகளை ஒப்புக்கொள்வதே உலகில் சுதந்திரமும் சமாதானமும் நீதியும் நிலவ வழி என்பதைக் கருத்திலிருத்தியும், மனிதப்பிறவியின் உள்ளார்ந்த மாண்பிலிருந்து அவ்வுரிமைகள் பிறப்பதை ஒப்புக்கொண்டும், _அய்.நா. திட்டத்தில் குறிப்பாக விதி 55இன் கீழ் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கிள்ளிக்கூட தராத கொடுமை! 1. கே : கல்விக்கடனைக் கட்டாயமாக வசூலிப்பதும், கார்ப்பரேட்டுகளின் லட்சக்கணக்கான கோடிக்கடனைத் தள்ளுபடி செய்வதும் எவ்வகையில் சரி? உச்சநீதிமன்றம் தலையிட முடியாதா? – சுனில்குமார், செங்கல்பட்டு. ப : உச்சநீதிமன்றமோ, உயர்-நீதிமன்றமோ அரசுகளின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்பது சட்டமரபு. மக்கள் மன்றத்திடம் பரப்புரை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும். மக்கள் போராட்டத்திற்குத் தலைவணங்காத அரசுகள் வரலாற்றில் நிலைத்தது இல்லை; நீடித்தது இல்லை. 2. கே :  உச்சநீதிமன்றம் சொன்ன பின்னரும் […]

மேலும்....

அறிவாயுதம்

– ஆறு. கலைச்செல்வன்  அந்த நகரத்தில் முதன்முதலாகக் கட்டப்பட்ட திருமண மண்டபம் என்பது இலட்சுமி திருமண மண்டபம்தான். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தத் திருமண மண்டபத்தில் அக்கால கட்டத்தில் நிறைய திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முன்பணம் கட்டி, பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மண்டபம் கிடைக்கும். இந்தத் திருமண மண்டபம் கட்டுவதற்கு முன்பாக சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே பந்தல் போட்டு திருமணங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இது […]

மேலும்....

உள்நாட்டுக் கடனும் சுதந்திரம் என்பதன் பொருளும்

(யூதர்கள் இரகசிய அறிக்கை) சென்ற அமர்வில் நான் உங்களுக்குக் கூறியபடி, தற்போது உள்நாட்டுக் கடன்களைப் பற்றிக் கூடுதல் விவரங்களோடு விளக்குகிறேன். வெளிநாட்டுக் கடன்களைப் பற்றி நான் உங்களிடம் மேலதிகமாகக் கூறப்போவதில்லை. ஏனெனில், வெளிநாட்டுக் கடன்கள் மூலம் உலகெங்களிலும் இருந்துவரும் பணத்தால் நம் கஜானா நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நாம் ஏற்கனவே நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரை வெளிநாடு என்று ஒன்று இருக்கப் போவதில்லை. யாரும் அந்நியர்களும் இல்லை. நம் சர்வதேச ஆட்சியில் […]

மேலும்....

ஏந்தல் பெரியார்! – முனைவர் கடவூர் மணிமாறன்

என்றும் இவரே பெரியாராம்; இனமா னத்தை இயம்பியவர் குன்றென நிமிர்ந்தே எழுந்திட்டார் குவலயம் மதிக்க உயர்ந்திட்டார்! சாதி மதங்களைச் சாடியவர்! சமத்துவ உணர்வை ஊட்டியவர்! வேதம் புராணம் பொய்புரட்டை வெகுண்டே நாளும் விளக்கியவர் இல்லா ஒன்றை இல்லையென்றார்! ஏய்ப்போர் முகத்திரை கிழித்திட்டார்; பொல்லா இழிவைப் பகுத்தறிவால் போக்கிடக் கருத்து விருந்தளித்தார்! வரலா றிவரை வாழ்த்திடுமே! வைக்கம் மறவரைப் புகழ்ந்திடுமே! அரசியல் விழிப்பை அளித்திட்டார் ஆரியச் சூழ்ச்சியைத் தடுத்திட்டார்! சுயமரி யாதையை எடுத்துரைத்தார் சூத்திரப் பட்டம் துடைத்தெறிந்தார்! பயமோ […]

மேலும்....