அய்யாவின் அடிச்சுவட்டில்…- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அளித்த மதிப்புறு முனைவர் பட்டம்!

இயக்க வரலாறான தன் வரலாறு (313) கி.வீரமணி திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாடு திருச்சியில் சிறப்பாக நடைபெற உழைத்த கழகத் தோழர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டு விழா திருச்சி பெரியார் மாளிகையில் 3.3.2003 மாலை 5:00 மணி அளவில் நடைபெற்றது. நாம் கலந்துகொண்டு நூல்களைப்பரிசாக அளித்து, பாராட்டி சிறப்புரையாற்றுகையில், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களை விளக்கிப் பேசினோம். சமூகநீதியை அனைத்து மட்டத்திலும் உறுதிப்படுத்த  போராட உருவாக்கப்பட்ட அமைப்பான சமூக நீதிக்கான வழக்குரைஞர் பேரவை( Lawyers Forum […]

மேலும்....

கட்டுரை – புவி வெப்பமடைதலைத் தடுக்க அய்.பி.சி.சி. வலியுறுத்தல்!

புவி வெப்பமடைதலைத் தடுக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தற்போதைய திட்டங்களால் 2030ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5குசி அளவுக்கு உயர்வதைத் தடுக்க முடியாது என்கிற அபாய எச்சரிக்கையை வழங்கியுள்ளது காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC). அய்.பி.சி.சி. தனது ஆறாவது மதிப்பீட்டு காலத்தின் இறுதியை எட்டியுள்ளது. இம்மதிப் பீட்டுக் காலமானது 2015ஆம் ஆண்டு தொடங்கியது. இக்காலத்தில் புவி வெப்பமாதல் தொடர்பாக மொத்தம் ஆறு அறிக்கைகளை அய்.பி.சி.சி. வெளியிட்டிருந்தது. […]

மேலும்....

கட்டுரை – மதத்தை அரசியலிலிருந்து பிரிக்கவேண்டும்!

மாவீரன் பகத்சிங்   (பகத்சிங் 20 வயது நிறையும்போதே பல்வேறு சிந்தனைகளை எழுதியுள்ளார்; பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க தீர்வுகளும் கூறியுள்ளார். சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டபோது, பகத்சிங் தனிநபர் பயங்கரவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் என்றும், அவர் சிறையில்தான் மார்க்ஸியத்-தையே கற்றுக் கொண்டார் என்றும் சிலர் அவருடைய ஆய்வு பற்றியும், முதிர்ச்சி பற்றியும், அறியாமையால் தவறாகக் கூறுகின்றனர். உண்மையில் அவர் சிறைக்குச் செல்லும்போதே முழு முதிர்ச்சியுடனும், தெளிவுடனும் இருந்தார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை சாண்டர்ஸ் கொலைக்கு6 மாதங்களுக்கு முன்பே […]

மேலும்....

நூல் அரங்கம் – நூல் : எல்லோருக்கும் உரியார்’ அவர் தான் பெரியார்!’

நூல் மதிப்புரை  ஆசிரியர்: முனைவர் த. ஜெயக்குமார் வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதற் பதிப்பு 2022 பக்கங்கள் 132 விலை ரூ. 110/- * உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் த. அருள் இந்த நூலின் அணிந்துரையில் சிறப்பான தகவல் ஒன்றைத் தருகின்றார். “புத்தகங்களை வாசகர்கள் புரட்டுவது வழக்கம்! ஆனால் இது போன்ற ஒருசில நூல்கள் மட்டுமே, வாசகர்களையே புரட்டிப் போடும்!” என்று மதிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த நூலை அணுக ஆரம்பித்தேன்! […]

மேலும்....

நடந்த கதை – நடுநிசியில் வந்த தீப்பந்தம்..!

ஆப்ரகாம் டி. கோவூர் இருநூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள அந்தத் தென்னந்தோப்பு உடரட்ட,பஹத்தரட்ட என்றழைக்கப்படும் மலை நாட்டுக்கும், பள்ளத்தாக்கிற்குமிடையில் அமைந்திருந்தது. இந்தத் தோப்பின் உரிமையாளரான டிக்கிரி சேனா என்பவர் இப்பகுதியில் ஓர் அரசனைப் போன்றே விளங்கினார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போர் என்கிறார்களே, அப்படிப்பட்ட-வர்கள்தாம் டிக்கிரி சேனாவும், அவரது மனைவியும். சுமார் அய்ம்பது குடும்பங்களுக்கு அவர்கள் இலவசமாகக் காணிகளை வழங்கி, அங்கு குடியேற்றி இருந்தார்கள். ஜேமிஸ், பீட்டர் என்ற வேலையாள்கள் மிகமிக விசுவாசத்துடன் டிக்கிரி சேனாவின் வீட்டில் வேலை […]

மேலும்....