ஆசிரியர் பதில்கள்

குருமூர்த்திகள் கருத்துகளை குப்பையில் போடுங்கள்! 1. கே : கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியான கருத்தைக் கூறிய நிலையில், “துக்ளக்‘ இதழின் அட்டைக் கருத்துப் படம் வன்மத்தின், வயிற்றெரிச்சலின், அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு என்று கொள்ளலாமா? – சாந்தி, திருமுல்லைவாயல். ப : குருமூர்த்திகளுக்கு’ எப்போது அரசியல் நேர்மையும் அறிவு நாணயமும் இருந்தது? அதைப் பொருட்டாக எடுத்துக்கொண்டு கேள்வி கேட்டு நேரத்தை நீங்களும் நானும் பாழடிக்கலாமா? குப்பை கூளங்களை […]

மேலும்....

நச்சுமனச் சனாதனத்தை வீழ்த்துவோம்!

நால்வருண மனுதரும நச்சுவிதை தூவி நாட்டோர்பால் வேற்றுமைகள் வளர்க்கின்றார்; நாளும் கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கதியில்லார், இல்லாக் கடவுளர்பால் பழிபோட்டுப் பாவங்கள் நீக்கும் மேல்சாதி என்றேய்ப்போர் அடிமைகளாய் ஆகி மேன்மையெலாம் இழந்தனரே! மிடுக்குடையோர் தாழ்ந்து வால்பிடித்துக் குனிந்தபடி வணங்கியெதிர் நின்றே வாய்பொத்திக் கிடப்போரும் வண்டமிழர் ஆமோ! வெறுப்பான அரசியலை நடத்துகிற வீணர் வெம்பழிகள் இழைக்கின்ற காவியரின் கூட்டம் பொறுப்பின்றிப் புலம்புவதை அறிவாளர் கேளார்; புல்லர்தம் கூற்றெல்லாம் பொய்யன்றோ? நாளை ஒறுப்புக்கே ஆட்படுவர்! நாட்டினரோ ஒன்றாய் உணர்ச்சியுடன் ஆர்த்தெழுந்தே சமத்துவத்தை […]

மேலும்....

கவிதை – பெருந்தலைவர் காமராசர்!

… முனைவர் கடவூர் மணிமாறன் … பெருந்தலை வர்நம் காம ராசரின் பெருமை அருமை பேசிடும் உலகம்! கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர் நல்லதோர் ஆட்சியை நடத்திய இனியர்; யாவரும் போற்றும் ஏழைபங் காளர்! மேவிய உழைப்பால் மேன்மை சேர்த்தவர்; பச்சைத் தமிழர் இவரெனப் புகழ்ந்து மெச்சிய தலைவர் தந்தை பெரியார்! அணைக்கட் டுகள்பல ஆய்ந்து கட்டிய இணையிலா முதல்வர் இவரே அன்றோ! அவரவர் குலத்தின் தொழிலைத் தொடர்ந்தே அவரவர் பிள்ளைகள் செய்திட – வேண்டி வெறிமிகு […]

மேலும்....

கட்டுரை – தந்தை பெரியாரும் காந்தியாரும்

… முனைவர் வா. நேரு … அக்டோபர் 2, 2023 காந்தியார் அவர்களின் 154ஆம் பிறந்த நாள். தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியாரைக் கொன்றவர்களின் தத்துவத்தைக் கொண்டவர்களின் கைகளில் இன்று இந்திய அரசாங்கம் இருக்கிறது.ஒரு பக்கம் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்துக்கொண்டே மறுபக்கம் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சையைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 1927-இல் தந்தை பெரியாரிடம், காந்தியார் நடத்திய விவாதத்தில் காந்தியாருக்குப் புரியும்படியாக சில விசயங்களைப் பெரியார் புட்டுப் புட்டு வைக்கின்றார். வைக்கம் போராட்டத்திற்குப் பிறகு […]

மேலும்....

பெண்ணால் முடியும் – ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை புரிந்துவரும் விளையாட்டு வீராங்கனை கோமதி !

நேபாளில் நடைபெற்ற ஈட்டி எறிதல் சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தைச் சேர்ந்த சோழவரம் கிராமத்தில் வசித்துவரும் கோமதி அவர்கள். இவரின் அம்மா சாவித்திரி, அப்பா முனிசாமி, இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வினி, ஆனந்தி, கோகிலா மற்றும் கோமதி என நான்கு மகள்கள். கோகிலாவும், கோமதியும் இரட்டை சகோதரிகள். கோமதி இரண்டு வயதாக இருக்கும் போதே இவரின் அப்பா இறந்துவிட்டார். 4 பெண் குழந்தைகளை வளர்க்க […]

மேலும்....