கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மறைவு 30.8.1957

திராவிடர் இயக்கங்களான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகங்களால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளை திரைப்படங்களில் முதன்முதலில் கொண்டு வந்தார். கலைவாணரின் சிறப்பு என்பது ‘திரைப்படத்துறை’யில் அறிவுப் பிரச்சாரம் செய்ததும், அத்துறையில் ஈட்டியதை, வாரி வழங்கியது என்பதாகவும்தான் அமைந்துள்ளது. கலைவாணர் ஒரு தனி மனிதரல்லர்; அவர் ஒரு சகாப்தம்! அவரோடு அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு சகாப்தம் இனி தோன்றுவது கடினம். என்னுடைய ஆசிரியர் ‘குடி அரசு’ என்று கூறிய கொள்கைக் கோமான்! […]

மேலும்....

மருத்துவமும் பகுத்தறிவும்

– டாக்டர் செந்தாமரை எதையும் ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்று கேள்விகள் கேட்டு ஆய்வுக்கு உட்படுத்தும்போதுதான் அதன் உண்மைத் தன்மை தெளிவாகத் தெரியும் என்றார் சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள். அப்படிப்பட்ட அய்யா அவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன் பேசியதுதான் இன்று மருத்துவத்துறையின் வளர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆண், பெண் சேர்க்கை இல்லாமலேயே குழந்தை பிறப்பு ஏற்படும் என்று ‘டெஸ்ட் டியூப் பேபி’ குறித்துப் பேசியிருக்கிறார்கள். 1978ஆம் ஆண்டு சூன் 25இல் முதல் சோதனைக்குழாய் […]

மேலும்....

சிறுகதை – காடும் மதமும்

– ஆறு. கலைச்செல்வன் பகலவனைச் சந்தித்தான் அவனது நண்பன் கலைவேந்தன். இளைஞர்களான இருவரும் நெருங்கிய நண்பர்கள். கலைவேந்தன் கையில் நாளிதழ் ஒன்று இருந்தது. முகத்தில் சோகமும் வேதனையும் காணப்பட்டது. “நாளிதழில் என்ன முக்கிய செய்தி”, என்று கலைவேந்தனைப் பார்த்துக் கேட்டான் பகலவன். “கடவுள்களின் பெயரால் காடுகளை அழித்து சிலைகளையும், கோயில்களையும் கட்டி வருகிறார்கள். இப்படிக் காடுகளை அழித்ததோடு மட்டுமல்லாமல் அங்கு திருவிழா வேறு நடத்தப்போறாங்களாம். நாளிதழில் செய்தி வந்திருக்கு. இப்படிக் காடுகளை அழித்து, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கினால் […]

மேலும்....

கைவல்ய ‘சாமியார்’ (22.8.1877)

மலையாளக் கள்ளிக்கோட்டையில் 22.8.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள்(கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றாரெனினும் அறிவுக்கடலாக விளங்கினார். தந்தை பெரியார் அவர்கள் தமது இளமைப் பருவத்தில், அவரது கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’களோடும் ‘பாகவதர்’களோடும் தருக்கமும் கிண்டலும் செய்து கொண்டிருந்த நாள்களில் அறிமுகமானவர். பிற்காலத்தில் இயக்கத்தின் விலை மதிக்கவொண்ணா உடைமையாய் கைவல்யம் அவர்கள் திகழ்ந்தார். கைவல்ய சாமியார், அய்யா அவர்களின் சுயமரியாதை இயக்கம் அமைக்கும் பணியில் உற்ற தோழராகத் தோள் கொடுத்தார். ‘குடிஅரசு’ கட்டுரைகளின் வாயிலாகத் […]

மேலும்....

தொல்லாய்வு

அறிய வேண்டிய அரிய தொல்லியல் குறிப்புகள் புலவர் செ. இராசு, எம்.ஏ., பிஎச்.டி.., “ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் மூன்று கொலைகார பார்ப்பன சகோதரர்கள்’’. இது வரலாற்று உண்மை. இதை தற்கொலை என்று கூறி மறைக்க நடக்கும் சதி.சுந்தரசோழன்  வானவன் மாதேவியின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இளவரசு பட்டம் சூட்டப்பட்டு தந்தையின் சார்பில் ஆட்சி புரிந்தவன். தன் பெயரிலேயே கல்வெட்டு பொறிக்கும் உரிமை பெற்றவன். அவன் கொல்லப்பட்டான். கொலை செய்தவர்கள் மூன்று பார்ப்பன சகோதரர்கள் அவர்கள், சோமன் […]

மேலும்....