மருத்துவம் : குடும்ப நலம் (Family Welfare)

– மரு.இரா. கவுதமன் ‘‘கு டும்ப நலம்’’ என்பது குடும்பத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ‘‘பெண்களின் நலமே’’ என்பதில் இரு வேறு வேறு கருத்துகள் இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது மட்டுமன்றி, நல்ல மனவளத் துடன் இருக்கவேண்டும். எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்திருந்தால் அந்தக் குடும்பமே படித்ததுபோல் ஆகுமோ, அதேபோல் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் நல்ல உடல் நலத்தோடு இருப்பா ரெனில் அக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் நல்ல […]

மேலும்....

சிறுகதை: சாரதாவின் முடிவு…

ஆறு.கலைச்செல்வன் சிந்தனைச்செல்வன் முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெறும்போது அவர் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். ஓய்வு பெறும் நாளன்று கூட, அவர் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இன்றோடு தனது பணி முடிவடைகிறதே என்ற கவலை அவருக்குச் சிறிதளவும் இல்லை. அவரை ஒத்த தலைமை ஆசிரியர்கள் பலர் எப்போது ஓய்வு பெறுவோம் என்று நாளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் இவர்களைச் சமாளிப்பது ஒரு புறம் இருந்தாலும், தனது உயர் அலுவலர்களைச் […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

 தஞ்சை பெ. மருதவாணன் தந்தை பெரியாரின் மத எதிர்ப்பு முழக்கம்! “குடிஅரசு’’ இதழுக்குத் தடை விதிக்கப்பட்டி-ருந்த இடைக்காலத்தில் “புரட்சி’’ என்ற பெயரில் ஓர் இதழைத் தந்தை பெரியார் நடத்தினார். “புரட்சி’’யின் தொடக்க இதழில் (26.11.1933) தந்தை பெரியார் எழுத்து வடிவில் எழுப்பிய மதஎதிர்ப்பு முழக்கங்கள் இவை! மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி! “மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி! மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி! மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி! மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை! […]

மேலும்....

பெண்ணால் முடியும்

கோலூன்றித் தாண்டுதலில் கோலோச்சும் வீராங்கனை! த ஞ்சாவூரைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைதான் ரோஷிமீனா. சிறு வயது முதல் ஈட்டி எறிதல், ஓட்டப் பந்தயம் ஆகிய தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அதனால் பெற்ற ஊக்கத்தால் முழுமையாக விளையாட்டில், ஈடுபட்டு சாதனைச் செல்வியாகத் திகழ வேண்டும் என்னும் ஆவலால். உந்தப்பட்டு இன்றளவில் ஒரு போல்வால்ட் வீராங்கனையாக மின்னிக் கொண்டிருக்கிறார். விளையாட்டுகளில் பரிசுகள் பல பெற்றமை யால் விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கையும், கல்வி ஊக்கத் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

மாட்டுக்கறி உண்பவர்கள் மட்டமானவர்களா? தந்தை பெரியார் ”இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல என்று […]

மேலும்....