பெண்ணால் முடியும்! : ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் கல்லூரி மாணவி

தமிழ்நாட்டிலிருந்து நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்று பன்னாட்டு அளவில் பங்கு பெறுவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஆண்ட்ரியா ஷெரின். தற்போது எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் சமூகவியல் (Sociology) இறுதியாண்டு படித்து வருகிறார். அவரது வெற்றிப் பயணம் பற்றிக் கூறுகையில், “எனக்கு ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டு மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. பள்ளியில் படிக்கும்போது, அங்கு நடைபெறும் 600 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில் பங்கேற்பேன். அதில் டிவிஷனல் வரைக்கும் சென்று […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்… ஜாதி ஒழிப்பிற்காகப் பெரியார் முன்வைத்த தீர்வுகள்

நூல்: ஏன், பெரியார் மதங்களின் விரோதி? ஆசிரியர்: வெற்றிச்செல்வன் – உதயகுமார் வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-24 போன்: 044-24726408   ஜாதி ஒழிப்பே தந்தை பெரியாரின் முதன்மையான நோக்கம். அதற்குச் சர்வரோக நிவாரணியாக எந்த ஒன்றையும் பெரியார் முன்வைக்கவில்லை. அப்படி ஒரு தீர்வும் இருக்க இயலாது என்பதே யதார்த்தம். ஜாதி ஒழிப்பு எல்லாத் தளங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டியது. பலமுனைத் தாக்குதல் ஒன்றே ஜாதிக் கட்டமைப்பைத் தகர்க்குமே தவிர, ஒற்றை ஆயுதம் ஜாதியை ஒழித்து விடும் என்று […]

மேலும்....

அறிவியல்

வேப்ப மரப் பட்டைச் சாறு, கொரோனாவுக்கு மருந்து! கொரோனா வைரஸ் பற்றியும், அதை ஒழித்துக்கட்டுவதற்கான மருந்துகள் குறித்தும் இன்றும் உலகளாவிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அப்படி ஓர் ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் (அய்.அய்.எஸ்.இ.ஆர்.) ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர். இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:- இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டுள்ள வேப்ப மரம், ஒட்டுண்ணி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு சக்திக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்-படுத்தப்பட்டு […]

மேலும்....

சிந்தனைக் களம் : அடிக்கட்டுமான ஆக்கம்

முனைவர் வா.நேரு மார்ச் 20, 2022 தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒருநாள். தமிழ்நாடு முழுவதும் அரசு நடத்தும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. திருமணத்திற்கு அழைப்பிதழ் அடித்து வாருங்கள் என அழைப்பதுபோல, நம் பள்ளி நம் பெருமை அழைப்பிதழ் என அச்சிட்டு வழங்கி, பெற்றோர் அனைவரும் அழைக்கப்-பட்டனர். “நம் ஊரில் உங்கள் பிள்ளை பயிலும் அரசுப் பள்ளிக்கு உங்களை வரவேற்கிறோம். இது உங்கள் பள்ளி. நாம் இணைந்துதான் பள்ளியை மேம்படுத்த வேண்டும். பள்ளியின் ஒவ்வொரு […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (97)

பெரியார் பர்வையில் பாரதி நேயன்   நம் தமிழ்நாட்டில் அண்மையில் பாரதியின் பிறந்த நாளை பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்போது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலைபோட்டுத் தூப தீப நைவேத்தியங்கூட சிலர் செய்தார்கள். இப்படி எல்லாம் செய்வதற்கு பார்ப்பனரின் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும், மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் […]

மேலும்....