மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (110)

ஆண்களுக்கான ஆய்வுகள் மரு. இரா.கவுதமன் ஆண்களின் விந்தும், ஆண் அணுக்களின் எண்ணிக்கையும், அதன் உற்பத்தியும் அதன் இயக்கத்தின் வேகமும், பெண் கருவுடன் இணையும் வாய்ப்பும் இணைந்து செயல்பட்டால்தான் ‘கருவுறுதல்’ (Fertilisation) நிகழும். ஆண்களுக்கு செய்யப்படும் ஆய்வுகள் இந்தத் தொடர் நிகழ்வில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று அறியவும், அதற்கான மருத்துவம் செய்யவும் உதவும். உடலியல் அளவில் ஏதேனும் குறைபாடு (Physical Examination) உள்ளதா என்ற ஆய்வும், ஆய்வுக்கூட சோதனைகளும் செய்யப்பட வேண்டி இருக்கும். உடலியல் குறைபாடு ஏதும் […]

மேலும்....

கட்டுரை : பெரியாரை விமர்சிக்கும் முன்…

வில்வம் பெரியார் என்பவர் யார்? கடவுள் இல்லை என்று சொன்னவரா? மதம் வேண்டாம் என்று சொன்னவரா? ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொன்னவரா? ஆம்! இவை மூன்றையும் சொன்னவர் பெரியார் தான்! இந்த மூன்று மட்டும் தான் பெரியார் சொல்லி இருக்கிறாரா? இல்லையில்லை! அவர் சொன்ன பல நூறு செய்திகளில் இந்த மூன்றும் அடக்கம்! ஆனால், இந்த மூன்றை மட்டுமே அடிக்கடி குறிப்பிட்டு எதிரிகள் அவரைச் சுருக்கிவிட்டார்கள்! உலக மக்களைப் போல் தமிழர்கள்! பெரியார் கொள்கைகளைத் தமிழர்கள் […]

மேலும்....

பெண்ணியம்: பகுத்தறிவு தந்த பாரமில்லா விடுதலை வாழ்வு!

மருத்துவர் கார்த்திகா நாட்டிலுள்ள பல பெண்களைப் போல நானும் இப்படித்தான் இருந்தேன். ‘கடவுள் உண்டு’ என்று கூறினார்கள். கேட்டுக் கொண்டேன். “கடவுளைப் பார்க்க முடியாது. ஆனால், நம்ப வேண்டும்’’ என்றார்கள். நம்பினேன். ஆனாலும், குழப்பமாக இருக்கும். புரியாது. கேள்வி கேட்டால், ‘பெரியவர்கள் சொல்வதை மதிக்க வேண்டும்’ என்றார்கள். மதித்தேன். ‘மதித்தேன்’ என்று சொல்வதைவிட “பயத்தில்” மதித்தாக வேண்டி இருந்தது. “நல்ல நாட்கள், நல்ல நேரம்’’ என்று கற்பித்தார்கள். அந்த நாட்களில் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினால் நல்லது […]

மேலும்....

கவிதை : அதிகார வல்லாண்ம நொறுங்கி வீழும்!

முனைவர் கடவூர் மணிமாறன் வடமொழியாம் சமற்கிருதம் பேசு வோர்கள் வாழ்கின்ற தனிநாடும் உண்டா? என்றும் முடமாகி மூடநெறி அவிழ்த்தே நாளும் முடங்கிப்போய்க் கிடக்கின்ற அதனை இந்நாள் விடம் கொண்ட பாம்பொன்றை வீட்டின் உள்ளே விடுவார்போல் புதுக்கல்விக் கொள்கை என்றே இடம்பார்த்து நுழைக்கின்ற ஆரியத்தார் ஏமாற்று வேலைகளை அறிவோம் நாமே! மதவெறியைப் பரப்புகிறார்; மாந்தர்க் குள்ளே மனக்கசப்பை, வேற்றுமையை மாண்பை மாய்க்கும் உதவாத சட்டங்கள் இயற்று கின்றார் உயர்சாதி இழிசாதி என்று சொல்லும் பதரனைய வருணத்தை அரிசி என்றே […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (302)

டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழா! கி.வீரமணி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யாமல் சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் எடுத்த எல்.அய்.சி. நிருவாகத்தைக் கண்டித்து, சென்னை அண்ணாசாலை எல்.அய்.சி. அலுவலகம்முன் 9.9.2000 அன்று முற்பகல் 11:00 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். சட்ட முறைப்படி நீதிமன்றத்தில் எங்களையும் இணைத்துக் கொண்டு உரிமையை நிலை-நாட்டுவோம் என்று அப்போது உறுதி கூறினேன். சென்னை அண்ணா நகர் புஷ்பாஞ்சலி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ.கோபாலன் மற்றும் இராணிப்பேட்டை மேனாள் […]

மேலும்....