பெரியார் பேசுகிறார்!

நான் மனிதனே! – தந்தை பெரியார் நான் சாதாரணமானவன்; என் மனத்தில்பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். “நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் –  கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்பதற்கு விளக்கம்

– தந்தைபெரியார்  கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே “கடவுள் தத்துவத்திற்கு’’ ஏற்ப கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரச்சாரம் செய்பவன், அல்லது கற்பித்துக் கொள்ளுபவன், அல்லது கடவுளுக்காக என்று கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள், மற்றும் அதற்காக கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காக என்று பூசைகள், உற்சவங்கள், பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாண யத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத் தையோ ஆதாரமாக வைத்து கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவதில்லை. “கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை’’ […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் – கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் – தந்தை பெரியார்

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்,பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறி வருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின்மேல் நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கிறார்கள், அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து ஏவி விடுகிறார்கள். பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாக பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கிறேன். காரணம், போராட்டம் துவக்கினால் எனது மேற்கண்ட பிரச்சார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று […]

மேலும்....

விடுதலைக்குத் தடையான மதமும், சடங்குகளும்! – தந்தை பெரியார்

“நான் இவ்வூருக்கு இதற்குமுன் இரண்டு தடவை வந்திருக்கிறேன், இது மூன்றாம் தடவை, தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல விடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால், சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலை பெற்று வாழும் மக்களிடம் சுய மரியாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப்பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. […]

மேலும்....

ஜாதி வித்தியாசமும் தீண்டாமையும் – தந்தை பெரியார்

பெரியார் பேசுகிறார் மக்களில் ஜாதி வித்தியாசம் என்பதுகற்பிக்கப்பட்டதே ஒழிய தானாகஏற்பட்டதல்ல. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைக்கும் தர்மமே ஜாதி வித்தியாசமாகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப் பிராயத்தில் இருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? மனிதர்களை எடுத்துக்கொண்டால் ஜாதியின் காரணமாக பிறவியிலாவது வாழ்க்கையிலாவது ஒழுக்கங்களிலாவது அறிவிலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றனவா? ஒன்றுமே […]

மேலும்....