ஆசிரியர்-பதில்கள்

விளக்கமும், விழிப்பும் பெற விடுதலையைப் படியுங்கள்! 1. கே: சட்டத்தின்மூலம் “தமிழ்நாடு’’ என்று அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நிலையில், அதைத் தவிர்த்து தமிழகம் என்றே அழைப்பேன் என்று ஆளுநர் அடம் பிடிப்பது சட்டத்திற்கு எதிரான செயல் அல்லவா? – ரமேஷ், திண்டுக்கல். ப: இதைவிட ஒரு மாநில ஆளுநரின் அரசமைப்புச் சட்ட விரோதப் பேச்சு வேறு இருக்கவே முடியாது. ‘தமிழ்நாடு’ என்பதுதான் அதிகாரப்பூர்வமாக 18.7.1967 அன்று சட்டமன்றத்தின் தீர்மானமாக நிறைவேறி, பிறகு ஒன்றிய அரசும் ஏற்று அரசிதழ் […]

மேலும்....

விளையாட்டு வீராங்கனை ‘மேரி கோம்’

மேரி கோம் உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் (5)அய்ந்து தங்கப் பதக்கங்களை வென்ற முதல் பெண் வீராங்கனை ஆவார். 2012ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற கோடைகால கால்பந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரே ஒரு வீராங்கனை ஆவார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2012ஆம் ஆண்டு இலண்டன் கோடை ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டி யிட்டு நிக்கோலோ ஆடம்ஸை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். […]

மேலும்....

பெண்ணால் முடியும்

வனப் பகுதியில் போர் புரியும் ‘கோப்ரா’ ஜங்கிள் வாரியஸ் இரும்புப் பெண்! ‘மத்திய ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ்’(CRPF) அமைப்பின் ஒரு பிரிவுதான் “கோப்ரா’’ (Commando Battalion for Resolute Action) Cobra என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரிவு, வனப் பகுதிகளில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற் காகவே உருவாக்கப்பட்ட கொரில்லா அமைப்பு ஆகும். மாவோ தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதுதான் இப்பிரிவின் சிறப்பு ஆகும். இப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் ‘ஜங்கிள் வாரியர்ஸ்(Jungle warriors) என அழைக்கப்படுகிறார்கள். இப்பிரிவில் பணியாற்றும் இளம் வயதுப் […]

மேலும்....

சிறுகதை: குப்பைத் தொட்டி

கலைஞர் மு. கருணாநிதி வீதியோரத்தில் அந்த மாடி வீட்டுக்குக் கீழேதான் நான் நீண்ட நாட்களாக தவம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தவம் எந்தக் கடவுளையும் வரவழைத்து அவர்களிடம் ஏதாவது அபூர்வமான வரங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல! அகிலத்தைக் கட்டியாள வேண்டுமென்று அரசர்கள் பலர் தவமிருந்தும், தன்னை அழிப்பார் யாருமிலர் என்ற நிலை ஏற்பட வேண்டுமென்று அசுரர்கள் கொடிய தவங்களை மேற்கொண்டதும் சாபங்களின் மூலம் பகைவர்களைப் பழி வாங்குகிற வரங்களைப் பெறுவதற்கு முனிவர்கள் தவத்தில் முனைந்ததும் எனக்கு […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் தாய்த்தமிழை இகழும் ‘தர்ப்பைக்’ கூட்டம் “தமிழென்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்தமிழ் குன்றுமேல் தமிழ் நாடெங்கும் இருளாம்” என்பது புரட்சிக்கவிஞரின் கவிதைக் கூற்று. பகை ஆரியத்துக்கோ பைந்தமிழ் என்றாலே ஓர் இழிவுப் பொருள். வழக்கிழந்த வடமொழியே இழக்க விரும்பாத ஓர் உயிர்ப்பொருள்! போலியாகத் தமிழைப் புகழ்வதெல்லாம் பிழைப்புக்காகவே! இதற்குச் சான்று பகரும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் இவை: 1. (அ) ஒரு மாலை நேர பூஜை வேளையில் கும்பகோணம் சங்கரமடத்தில் நடந்த நிகழ்ச்சி […]

மேலும்....