இன்று உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும், ஹிக்ஸ் போசான் -_ கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடத்திற்கு, அவர்களின் அனுமதி பெற்று நேரில் சென்று பார்த்து வந்தவர், சென்னை வேளச்சேரியில் வசிக்கும் முருகானந்தம். இவரை உண்மை இதழுக்காக அணுகினோம்.
இவர் அழகப்பா கல்லூரி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஈர்ப்பு விசையின் உண்மைகளை கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருபவர். அய்ன்ஸ்டீன் அறிவியல் இயக்கம் (Einstein Science Movement) என்ற இயக்கத்தை நிறுவி அறிவியலை மக்களிடம் பிரச்சாரம் செய்து வருபவர்.
கேள்வி: ஹிக்ஸ் போசான் – ஏன்? எதற்கு? எப்படி?
பதில்: Science is nothing. But, Searching the Truth. கேள்வி முற்றுப் பெறும் வரையிலும் உண்மையைத் தேடிச் செல்வதுதான் அறிவியல். அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புதிரையும் அவிழ்த்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில்தான், கேள்வி மேல் கேள்வி கேட்டு செயல்முறையில் அந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்து வருகிறது. முதலில் இந்த பிரபஞ்சம் என்றால் என்ன? கேலக்சி. கேலக்சி என்றால் என்ன? Solar System போல் கோடிக்கணக்கான Solar System சேர்ந்ததுதான் கேலக்சி. Solar System என்றால் என்ன? இந்த சூரியன், கிரகங்கள். சரி, இவை அனைத்தும் எவற்றால் ஆனவை. இவை அனைத்தும் அணுக்களால் ஆக்கப்பட்டவை. சரி, அணு என்றால் என்ன? இப்படியே போய் போய்த்தான் பிரபஞ்சத்தின் தொடக்கத் துகள் ஹிக்ஸ் போசான் வந்தது.
மத நம்பிக்கையாளர்கள், இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்றும், பகுத்தறிவாளர்கள் இல்லையில்லை இது தானாகவே தோன்றியது என்றும் காலங்காலமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அறிவியலுக்கு எதற்குமே ஆதாரம் தேவைப்படும். அந்த ஆதாரம்தான் இந்த ஹிக்ஸ் போசான்.
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் இந்த ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. அதில், பிரான்சில் 75%, சுவிட்சர்லாந்தில் 25% நிலமும் சேர்ந்தாற்போல பூமிக்கு கீழே 27 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு பக்கம் 500 அடிக்கு கீழேயும், மற்றொருபுறம் 300 அடிக்கு கீழே சாய்வாக ஒரு சுரங்கம் அமைத்திருக்கிறார்கள். அதில் இதற்காகவே புதிதாக வடிவமைக்கப்பட்ட மூன்றடி உயர உருளைக் குழாய் இருக்கிறது. அந்தக் குழாயைச் சுற்றி மயிரளவில் ஏழில் ஒரு பங்கு அளவில் காப்பர் கம்பிகள் Automation மூலம் சுற்றப்பட்டிருக்கிறது. அதைச் சுற்றி காந்தம் இருக்கிறது. அந்த காந்தத்தைச் சுற்றி திரவ நிலையில் ஹீலியம் இருக்கிறது. தீ பற்றக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதையும் – 2700 cg உறைய வைத்திருக்கிறார்கள். (அண்டார்டிக்காவில் -600 cg தான். நிலவிலும் கூட – 2000 cg தான். பிரபஞ்சத்திலேயே அதிகபட்சம் -2500 cgதான்) அப்படி அமைக்கப்பட்ட குழாயினுள்Super Conductivity-யை ஏற்படுத்தி அணுவை நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் எனத் தனித்தனியாக பிரித்து அதையே சூரியனின் மையத்தில் இருக்கும் வெப்பத்தைப் போல இலட்சம் மடங்கு அதிக வெப்பத்தில் மோதவிடுகிறார்கள். (இரண்டு ஊசி முனைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டுப் பாருங்கள். முடியாது. ஆனால், ஊசி முனையைப் போல கோடிக்கணக்கான மடங்கு சிறியது அணு.) அப்படி நடந்த மா…பெரும் மோதலில்தான் இதுவரை இல்லாத ஒரு புதுப்பொருள் ஹிக்ஸ் போசான் இருப்பதாக 99% உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: இது எப்படி சாத்தியமாயிற்று?
பதில்: வெவ்வேறு காலகட்டங்களில் அறிவியலாளர்கள் பலர் பல வியப்பான உண்மைகளை கண்டறிந்து கூறியிருந்தாலும் அய்ன்ஸ்டீனுக்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. 1900ஆம் ஆண்டுவரை நியூட்டன் சொன்னதுதான் சரி என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். நியூட்டன்,Light Travels in Straight path என்றார். ஆனால், அய்ன்ஸ்டீன் Light 1.170 /sec வளைகிறது என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அய்ன்ஸ்டின் சொன்னதுதான் சரி என்று நிரூபிக்கப்பட்டது. நியூட்டன்,“Mass Contract Weight Various” என்றார். ஆனால், “Mass is also Various” என்றார். நியூட்டன், “Accellaration due to Gravity”என்றார். ஆனால், அய்ன்ஸ்டீன் தலைகீழாக, “Gravity due to Accellaration” என்றார். அய்ன்ஸ்டீனின் கணக்கு கச்சிதமாக இருந்தது. அய்ன்ஸ்டீனின் E = MC2 என்பது 38 ஆண்டுகள் கழித்துத்தான் நிரூபணம் ஆனது. நிறையும், சக்தியும் ஒன்றுதான். வேறு வேறு அல்ல. விரிந்தால் சக்தியா கிறது. சுருங்கினால் பொருளாகிறது. இதுபோல பல ஆய்வு களால்தான் இது சாத்தியமாயிற்று.
கேள்வி: ஜெனிவாவில் கடந்த முறை இதே ஆராய்ச்சி தோல்வியில் முடிந்ததே? அதற்கு என்ன காரணம்?
பதில்: அதைத் தோல்வி என்று சொல்ல முடியாது. தொழில் நுட்பக் கோளாறுதான் காரணம். முதன் முதலில், இவ்வளவு பெரிய Project செய்யும்போது இப்படிப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். பதினான்கு டெரா எலக்ட்ரான் Volt டை முதன்முதலில் தொடங்arகும்போதே பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அனுபவத்தின் வாயிலாக, அடுத்த முறை ஒரு டெரா எலக்ட்ரான் வோல்ட்டிலிருந்து தொடங்கி இதை செய்து முடித்திருக்கிறார்கள். அதனால்தான், தவறு எங்கெங்கு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்ய முடிந்திருக்கிறது. ரால்ஃப் ஹியூபர் என்பவர்தான் இந்த ஆராய்ச்சி மய்யத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர் ஜெர்மானியர்.
கேள்வி: ஹிக்ஸின் தியரி என்ன?
பதில்: 1964லில் ஹிக்ஸ் என்பவர், இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது. அது சுருங்கி இருந்தது. ஒரு பெருவெடிப்பின் மூலம் அது விரிந்து கொண்டிருக்கிறது. நீயூட்டனின் முதல் விதிப்படி, போய்க் கொண்டிருக்கிற பொருள். போய்க் கொண்டேதான் இருக்கும். Unless it is affected by external force. ஒரு சக்தி தடுக்கிற வரையிலும். இதை அவர் Hubble கண்டுபிடித்த தொலைநோக்கி மூலம் பார்த்து கண்டுபிடித்தார். இதுதான், இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை.
கேள்வி: கண்ணுக்கே தெரியாத அணுக்களை எப்படி பிரிக்கிறார்கள்? அதை எப்படி மோத விடுகிறார்கள்?
பதில்: கண்ணுக்கே தெரியாது என்று சொல்வதை விட, கண்ணுக்கு தெரிந்த தூசியை 100 கோடி மடங்காக பிரித்தால் எப்படி இருக்கும். கற்பனைக்கு எட்டாத விசயம். அவ்வளவு சிறிய துகள்களை பிரிப்பதும், மிகவும் கடினமான விசயம் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. ஆனால், விஞ்ஞானிகள் மிக மிகச் சுலபமாக பிரித்து விடுகிறார்கள். அதாவது, Electron Negative Charge, Proton – Positive charge ஒரு பக்கம் Positive முனை. மறுபக்கம் Negative முனை. அதனுள் ஹைட்ரஜனை உள்ளே செலுத்துகிறார்கள். Electron – Negative என்பதால் Positive நோக்கி ஓடுகிறது. Proton Positive என்பதால் Negativeவை நோக்கி ஓடுகிறது. புரோட்டானையும், எலக்ட்ரானையும் எதிர்எதிர் திசையில் ஓடச் செய்வதற்கு Radio Cavity என்ற ஒரு கருவியை வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் அணுக்கள் எதிரெதிர் திசையில் ஓடி (Clockwis + Anti Clockwise) மோதி வெடிக்கிறது. இரண்டும் மோதுகின்ற நேரம் என்பது நூறு கோடியில் ஒரு பங்கு. இதை அறிய Photo device. Data device என்ற கருவிகளை பொருத்தியிருக்கிறார்கள். அந்த 100 கோடி மடங்குகளில் ஒரு பகுதியில் என்ன நடக்கிறது என்பதை இந்தக் கருவிகள் துல்லியமாக காட்டி விடுகிறது. எதிரெதிர் திசையில் ஓடிவரும் அணுக்களின் வேகம் என்பது கற்பனைக்கும் எட்டாத வேகம்.
கேள்வி: அணு வெடிப்புக்கு தேவைப்படும் வெப்பம் எவ்வளவு?
பதில்: சூரியனில் இருக்கும் வெப்பம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் சென்டிகிரேடு. அந்த வெப்பத்தில் கூட இந்த நிறை என்பது கிடைக்கவில்லை. ஒரு ஹைட்ரஜன் அணுவும், நைட்ரஜன் அணுவும் மோதி நிறை அதிகமான ஹீலியம் அணுவாக வருகிறது. இதைப்போல இலட்சம் மடங்கு கூடுதலாக வெப்பம் தேவைப்படுகிறது. இது கற்பனைக்கும் எட்டாத ஒன்று. சூரியனுக்குள் நாம் வாழும் பூமியைத் தூக்கிப் போட்டால் ஒரு நொடியில் சாம்பாலாகிப் போய்விடும். அவ்வளவு வெப்பம் சூரியனுக்குள் ளேயே இருக்கிறது. அந்த வெப்பத்தைக் காட்டிலும் இலட்சம் மடங்கு வெப்பம் இருந்தால்தான் அணு வெடிப்பு நிகழ்கிறது. இந்த வெப்பத்தை எப்படி அடக்கி வைத்திருக்கிறார்கள் என்றால் மேக்னடிக் பிளக்ஸ்க்_குள்ளே வைத்திருக்கிறார்கள். மேக்னடிக் பிளக்ஸ் பொருள்களை பாதிக்காது.
கேள்வி: சரி, பிரபஞ்சத்தில் கடைசித் துகளை ஏறக்குறைய கண்டுபிடித்தாயிற்று. அதற்கும் அடுத்து என்ன? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா?
பதில்: Graviton-தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. Graviton என்பது Big Bangக்கு முன்னாலேயே இருக்கிறது. Gravitation என்பது Zero. Zero என்பது arithmetic-க்கில்தான் ‘Nothing’ – என்று சொல்கிறோம். விஞ்ஞானத்தில், அதாவது இயற்கை Law-வின்படி Zero- nothing கிடையாது. Something meaningful. Zero-வுக்கு ஒரு பொருள் இருக்கிறது.
அதாவது, 1 _ என்பது 1/2 + 1/2 _தான். அல்லது 2-1தான். Zero எப்படி வருகிறது? _, + = 0. So, 0 – can be divided into two parts. ஆக, Negative, Positive இரண்டும் சேரும் போதுதான் 0 வருகிறது. ஆகவே, Graviton என்பது ஒன்னுமேயில்லாத போசான். ஆனால், Big Bang-க்கு முன்னாலேயே அந்த Field இருக்கிறது.Absolute 0- வில் அணுக்கள் எல்லாம் நின்றுபோகும். ஆனால், இந்த Graviton Contracting Motion இருந்துகிட்டுதான் இருக்கும். அது ஒன்று சேரும்போது முதல் சிறிய Big Bang உருவாகிறது. இந்த Big Bang பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவானது. பல கோடி ஆண்டுகளுக்கு பின்னாலும் நடக்கும். தோன்றுதல், வாழ்தல், மறைதல் என்பது பிரபஞ்சத்துக்கு இருக்கிறது. இதுவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டதுதான்.
– சந்திப்பு : உடுமலை வடிவேல்