“மகளிர் குல மணிவிளக்காகவும் அறிவியக்கத்தின் ஒளிச்சுடராகவும் தெளிந்த சிந்தனையும் திடமான நெஞ்சமும் கொண்ட வீராங்கனையாகவும் விளங்கியவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள். பெரியாருக்குத் துணையாக இருந்து தன்மான இயக்கத்தையும், திராவிடர் கழகத்தையும், வளர்த்தார்கள் என்பது மட்டுமல்ல, பெரியாருக்குப் பிறகு அவரது கொள்கைகளைக் காக்க ஓயாது உழைத்தார்கள். ஓய்வில்லாத பணிதான் அவரது உயிரையும் கொள்ளை கொண்டுவிட்டது என்று சொன்னால்
அது மிகையாகாது.”
– டாக்டர் கலைஞர்
(முரசொலி 19.3.1978)