எச்சரிக்கைத் தொடர் – நம் கட்டளைகளை கேள்வி கேட்காது நிறைவேற்ற வேண்டும்! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

2023 அக்டோபர் 1 - 15, 2023

நமக்கு எப்போது வெளிப்படையாக ஆட்சி அதிகாரம் வருகிறதோ, அதன் அருள் உலகெங்கும் பரவ எப்போது நேரம் வாய்க்கிறதோ, அப்போது நாம் சட்டங்களை எல்லாம் மாற்றியமைப்போம். நாம் வகுக்கும் சட்டங்கள் யாவும் சுருக்கமாகவும், தெளிவாகவும், நிலையானதாகவும், எவ்வித வியாக்கியானத்துக்கும் இடம் இல்லாததாகவும் இருக்கும். இதனால் அந்தச் சட்டங்களை யாரும் தெளிவாக, எளிதாக அறிய முடியும். இதில் முக்கிய அம்சமானது, அதிகாரத்தில் உள்ளவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது பற்றியதாகும். அந்தக் கொள்கை அதிகமதிமாக வலியுறுத்தப்படும். இதனால், சமுதாயத்தின் அனைத்து வகையான வரம்பு மீறலும் மறைந்து போகும். ஏனெனில், சமுதாயத்தில் மேலிருந்து கீழ் வரை, அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் பிரதம அதிகாரிக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள். அவரைத் தவிர்த்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் மற்ற அதிகாரிகள் யாராயிருந்தாலும் கருணையற்ற முறையில் தண்டிக்கப்படுவார்கள். அவ்வாறு தண்டிக்கும்போதுதான் தங்கள் அதிகாரத்தை வைத்து விஷப்பரீட்சை நடத்திப் பார்க்கும் துணிச்சல் வராது. நிருவாகப் பணியில் ஒவ்வோர் அசைவையும் நாம் உன்னிப்புடன் கவனித்து வர வேண்டும். ஏனெனில் நிருவாகம் ஒழுங்காக நடைபெற்றால் தான் அரசு இயந்திரம் நல்லமுறையில் இயங்கிக் கொண்டிருக்கும். அதில் தொய்வு ஏற்பட்டால், அரசு இயந்திரம் முழுவதிலும் தொய்வு ஏற்படும். சட்டவிரோத அல்லது அதிகார துஷ்பிரயோக வழக்கில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை அளிக்காமல் விடப்பட மாட்டாது.

நம் ஆட்சியின் தொடக்கக் காலகட்டத்தில் குற்றவாளிகளிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோமோ அதுவே மற்றவர்களுக்குப் படிப்பினையாக அமையும். குற்றச் செயல்களுக்கு நாம் அளிக்கக்கூடிய தண்டனைகளைப் பார்க்கும் அதிகாரிகள், அதன் பிறகு தங்கள் மத்தியில் கூட்டணி வைத்துக்கொண்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவோ குற்றவாளிகளைக் காப்பாற்ற முனையவோ மாட்டார்கள். சிறிய விதிமீறல்களுக்குக் கூட கொடூரத் தண்டனைகளை அளிப்பது அவசியம். அப்பொழுதுதான், அதிகாரம் தன் புனிதத் தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அதைப் பார்க்கிற மக்களுக்கு, நம் ஆட்சியின் மீதான நன்மதிப்பு உயரும்.

தண்டனைக்குள்ளாகும் ஒருவன், தன் குற்றச்செயலின் தன்மையைவிட அதிகத் தண்டனையை அடையக்கூடும். அந்த நிலைக்குள்ளாகும் ஒருவன், அதிகாரம், கொள்கை மற்றும் சட்டத்திற்காக நிருவாகம் என்னும் போர்க்களத்தில் வீரமரணமடைகின்ற போர்வீரனாகக் கருதப்படுவான். பொதுமக்களுக்காக ரதத்தின் கடிவாளம் பிடித்து நெடுஞ்சாலையில் செல்லும் ஒருவன், தன் சொந்த நலனுக்காக அதைத் தனியார் பாதையில் திருப்பிவிடக்கூடாது.

நம் ஆட்சியில் உள்ள நீதிபதிகள், தங்கள் கடமையை நன்கு உணர்ந்தவர்களாக இருப்பர். தங்களைக் கருணையாளர்கள் என்று வெளியுல-கிற்குக் காட்டுவதற்காக, கருணை அடிப்படையில் முட்டாள் தனமான தீர்ப்புகளை வழங்க மாட்டார்கள். அப்படிச் செய்வது, தம் துறையின் நோக்கத்திற்கு எதிரான ஒன்று என்பதை நம் நீதிபதிகள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். மனிதன் எப்போதெல்லாம் வழி தவறி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறானோ, அப்போதெல்லாம் அவனுக்குத் தண்டனை அளித்து, அதன்மூலம் பிறருக்குப் படிப்பினை தருவதற்குத்தான் சட்டமே தவிர, பொது வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை மன்னித்து, தங்களை ஆன்மிக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் என்று நீதிபதிகள் படம் காட்டுவதற்கு அல்ல. இந்தக் கருணையை எல்லாம், தங்கள் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, நீதிபதி என்னும் தகுதியில் அமர்ந்து கொண்டு பொது வட்டத்தில் அதைச் செய்யக்கூடாது. ஏனெனில், பொதுத் தளத்தின் வாயிலாகத்தான் மனிதர்கள் படிப்பினையைப் பெறுகிறார்கள்.

நம் அரசைப் பொறுத்தவரை, நீதித்துறையில் உள்ளவர்கள் 55 வயதுக்கு மேல் பணியாற்ற மாட்டார்கள். இதற்கு முதலாவது காரணம், வயதானவர்கள் முன்முடிவுகளுக்கு அதிகம் ஆட்பட்டவர்கள். அவர்கள் புதிய திசைகளில் பயணிக்கச் சக்தி பெற்றவர்கள் அல்லர். இரண்டாவதாக, இது போன்ற ஓர் ஏற்பாட்டின் மூலம், ஊழியர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க முடியும். இதனால், நமது நெருக்கடிகளுக்கு ஏற்றாற்போல் அவர்கள் வளைந்து கொடுப்பார்கள். யாருக்காவது தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ஆசையிருந்தால், அவர்கள் நாம் இடும் ஆணைகளுக்குக் கண்ணை மூடிக்கொண்டு அடிபணிய வேண்டும். நம்மால்தான் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் சட்டத்தைப் பற்றிய முழுமையான புரிதல் கொண்டவர்களாக இருப்பார்கள். சட்டத்தைச் செயல்படுத்தி, தண்டனை அளிக்கத்தான் நீதிபதிகள் அப்பதவியில் உள்ளார்களே தவிர, இந்த லிபரலிச கனவுகளில் உழன்றுகொண்டும், அரசாங்கம் மூலம் மக்கள் பெறும் படிப்பினைகளைத் தடுத்துக்கொண்டும் இருப்பதற்காக அல்ல என்பதை அந்நீதிபதிகள் அறிந்து வைத்திருப்பார்கள்.
நமது எதேச்சாதிகாரம் அனைத்து இடங்களிலும் சீரான முறையில் நிரம்பியிருக்கும். அதன் முறையான செயல்பாடு காரணமாக, நமது பெருமதிப்பிற்குரிய அரசர் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் எந்த எதிர்க்கேள்வியுமின்றி முழுமையாகப் பின்பற்றப்படும். அரசர் மீதான மதிப்பச்சம் அவருடைய கட்டளைகளுக்கு எதிரான முணுமுணுப்புகளையும் அனைத்து வகை கருத்து வேறுபாடுகளையும் ஒழித்துக்கட்டும். மாறாக, எதிர்ப்பு எந்த வகையான வடிவங்களில் வெளிப்பட்டாலும் உடனடியாகக் கடுமையான தண்டனைகள் மூலம் அவை அழிக்கப்பட்டு, வேரோடு பிடுங்கி எறியப்படும்.
நம் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் உரிமை ரத்து செய்யப்பட்டு, அந்த உரிமை நம் பிரத்யேகப் பயன்பாட்டிற்காக மட்டும் வைத்துக்கொள்ளப்படும். நம்மால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள், தங்கள் முடிவுகளில் தவறிழைக்கக் கூடியவர்கள் என்கிற சிந்தனை மக்களிடையே வரக்கூடாது. எனினும், அதுபோன்ற தவறுகள் நிகழும்பட்சத்தில், நீதிபதிகளின் தீர்ப்புகள் ரத்து செய்யப்பட்டு, தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறிய காரணத்திற்காக அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் தகுந்த முறையில் அதற்கான தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவருக்கு அளிக்கப்படும் தண்டனையே, அதே தவறைப் பிற நீதிபதிகள் தொடராதிருக்கப் போதுமானதாயிருக்கும்.

நமது அரசாங்கம், குடும்பத் தலைவனைச் சார்ந்துள்ள ஒரு குடும்ப அமைப்பை ஒத்ததாக இருக்கும். நமது மேன்மைமிகு ஆட்சித் தலைவரை, தங்களுடைய தந்தையைப் போன்று மக்கள் மதிப்பார்கள். மக்களுடைய ஒவ்வொரு தேவையிலும், நடவடிக்கைகளிலும் ஒரு தந்தைக்குரிய அக்கறையுடன் அவர் நடந்துகொள்வார். ஒருவர் மற்றொருவருடன் எப்படி உறவாட வேண்டும், அரசாங்கத்தோடு மக்களுக்குள்ள உறவென்ன போன்றவற்றையெல்லாம் அவர் கற்றுத்தருவார். ஒருவன் அமைதியுடனும் நிறைவுடனும் வாழ விரும்பினால், அது அரசரின் பாதுகாப்பும் வழிகாட்டலும் இன்றி சாத்தியமில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். கடவுளை வழிபடுவது போன்று, சர்வாதிகார அரசரையும் மக்கள் வழிபடுவார்கள். இந்த நிலை எப்போது ஏற்படும் என்று கேட்டால், நம்மால் நியமிக்கப்படும் அதிகாரிகள், அதிகாரிகள் என்ற தகுதியில் மாத்திரமில்லாமல், ஆட்சியாளருடைய கட்டளைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களாக ஆகும்போதுதான் சாத்தியமாகும்.

புத்திசாலி பெற்றோர் தம் மகனைக் கடமையிலும், கீழ்ப்படிதலிலும் சிறந்தவனாக ஆக்குவதற்கு சிரத்தை மேற்கொள்வதைப் போன்று, மக்களின் அனைத்து வாழ்க்கை விஷயங்களையும் செம்மைப்படுத்தி சீர்படுத்திக் கொடுக்கிற காரணத்தால், நம்மை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். நமது அரசியலின் தாரக மந்திரம் என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் வளராத சிறு குழந்தைகள் போன்றவர்கள் என்பதுதான். குறிப்பாக, அவர்களின் அரசாங்கங்கள் வளர்ச்சியடையாத சிறு குழந்தையைப் போன்றதாகும். இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அவர்களுடன் வரலாறு நெடுகிலும் பழகி வருகிறோம்.

நீங்கள் கவனித்தால், நமது சர்வாதிகார அரசாங்கம் உரிமை, கடமை என்ற அடித்தளத்தின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளதை உணரலாம். மக்களை அவர்களுடைய கடமையைச் செய்யச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்துவது, தந்தை ஸ்தானத்தில் உள்ள ஓர் அரசாங்கத்தின் கடமையாகும். மக்கள் நன்மையைக் கருதி அவர்களின்மீது தம் பலத்தைப் பயன்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது. இயற்கை வகுத்துக் கொடுத்துள்ள கீழ்ப்படிதல் என்னும் கொள்கைக்கு மக்களை இட்டுச் செல்வதுதான் அவர்களுக்கு நன்மையானது. ஏனெனில் உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளும் ஒன்று மனிதனுக்கு அடிபணிகின்றன அல்லது அவை இருக்கும் சூழ்நிலைக்கோ தம் இயற்கை சுபாவத்திற்கோ உட்பட்டே செயல்படுகின்றன. அது வலிமையானதோ மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்படிந்த நிலையில் உள்ளதை நாம் எல்லா நிலைகளிலும் காணலாம்.

(தொடரும்)