மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் வகையில் ஊடகங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு இடம் அளிக்கின்றன. 90 விழுக்காடு நிகழ்ச்சிகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளாகவே உள்ளன. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவை அவர்களுக்குப் பிரச்சினையே அல்ல; டெண்டுல்கர் 100 வது சதம் அடித்ததுதான் முக்கியமான செய்தியாகும். அவர் 100ஆவது சதம் அடித்தவுடன், வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி, வறுமை எல்லாம் காணாமல் போய்விடும்; நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுமா? ஜோதிட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதும், ஜோதிட பலன்களை பத்திரிகைகள் வெளியிடுவதும் மடமை மிகுந்த செயல்களாகும்.
– மார்க்கண்டேய கட்ஜூ,
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி,
பத்திரிகை கவுன்சில் தலைவர்