மலையேறுதல் என்பது உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியின் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையை வலிமை
யாக்கும் சிறந்த பயிற்சி ஆகும்.
மலை ஏறுதல் ‘டிரக்கிங்’. இதற்கென தனியாக வழித்தடங்கள் உள்ளன. மலை ஏறுவதை பலர் பொழுது போக்காகவும், செய்து வருகின்றனர். சிலர் பயிற்சியாகச் செய்கின்றனர். மலையேறுதலில் பல இடங்களுக்குச் சென்று வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டுள்ளார் தோழர் கவுசல்யாதேவி.
கவுசல்யா ஊட்டி, பெங்களூரு, கருநாடகா பகுதியில் உள்ள முக்கொம்பு, இமாச்சலம் எனப் பல பகுதிகளுக்குச் சென்று அங்கு டிரக்கிங் செய்துள்ளார். மேலும் ‘டிரக்கிங்’ என தனிக் குழு ஒன்று அமைத்து, அதன் மூலம் பலருக்கு அந்த அனுபவங்களை உணரச் செய்கிறார். மாஸ் கம்யூனிகேஷன், ஆங்கில இலக்கியம், சைக்காலஜி, வரலாறு, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற துறைகளில் பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும், இவர் பகுதி நேரமாக கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாப்ட் ஸ்கில்ஸ் குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.
கவுசல்யா தேவியின் சொந்த ஊர் ஊட்டி. அங்கு, வனாகா என்னும் பழங்குடி இனம் உள்ளது. அவ்வினத்தைச் சேர்ந்தவர்தான் கவுசல்யா. ஊட்டியில் இவர் இருக்கும் இடத்தில் பெரிய அளவு கல்விக்கான வசதி இல்லை. என்பதால் பெங்களூருக்கு இவர்கள் குடிபெயர்ந்து வாழ்கின்றனர். இவர் அங்குதான் படித்தார். வேலையும் அங்குதான் பார்த்துக்கொண்டிருக்கிறார். மலையேற்றம் பற்றி இவர் கூறுகையில், “நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே மலைதான். கடைக்குப் போக, பால் வாங்க, ஏன் நாங்கள் விளையாடப் போகணும் என்றாலும் மலைமீது ஏறி இறங்கித் தான் போக வேண்டும். ஒரு இடத்திற்குச் செல்ல மலை மீது ஏறித்தான் போக வேண்டிய சூழ்நிலை எங்கள் மக்களுக்கு. சிறிய வயதிலிருந்தே எங்க இன மக்களுக்கு மலை ஏறுவது என்பது சர்வசாதாரணமாகப் பழகிவிட்டது. அதைத்தான் இங்கு ‘சிட்டி’ மக்கள் ‘டிரக்கிங்’ என்று சொல்கின்றனர். இங்கே ‘டிரக்கிங்’ செய்யும் போது காலில் உயர் ரக மலையேற்றக் காலணி மற்றும் உணவுப் பொருள்களை எல்லாம் கொண்டு செல்கிறார்கள். ஆனால் நாங்கள் வெறும் காலால் தான் நடந்து செல்வோம்.
“டிரக்கிங்’’ செய்வதில் எல்லோருக்கும் பழக்கம் இருக்காது. முதன்முறையாகச் செல்ல விரும்புபவர்கள் சின்னச் சின்ன உயரமுள்ள இடங்களுக்குச் சென்று பழகிய பிறகு மிக உயரமுள்ள இடங்களுக்குச் செல்லலாம். அதன்பிறகு இரண்டு நாள், மூன்று நாள் எனக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பவை எல்லாம் சின்னச் சின்ன மலைகள்தாம். இங்கு பயிற்சி எடுத்துக்கொள்வது எளிது. ஆனால், வடநாட்டில் உள்ள மலைகள் உயரம் அதிகம். அங்கு ‘ட்ரக்கிங்’ செய்வது கொஞ்சம் கடினம் என்றாலும் பழக்கப்பட்டுவிட்டால் எதையும் கடந்துவிடலாம்.
காடு மலைகளில் செல்பவர்கள் 100 சதவிகிதம் நெகிழிக் (றிறீணீstவீநீ) கழிவுகளை அங்கு விட்டுவிட்டு வரக்கூடாது. பிஸ்கட், பிரட் இவற்றின் நெகிழி உறைகளை அங்கேயே போட்டுவிட்டு வரக்கூடாது. அதனை ஒரு சிறிய பையில் சேகரித்துக்கொண்டு வர வேண்டும். மலையிலிருந்து இறங்கி வரும்போது குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
“இமயமலை _ எல்லோரும் வாழ்நாளில் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படும் மலைகளில் ஒன்று. அங்கு மலையேற்றம் செய்வது கடினமானது என்றாலும் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் மேலே ஏறிச் சென்றேன்.
எனது அடுத்த மறக்க முடியாத பயணம் _ 2017ஆம் ஆண்டு மேகாலயா சென்றது. அங்கிருந்த மக்களுக்கு இன்றைய இணையத் தொழில்நுட்பங்கள் எதுவும் தெரியவில்லை. நாங்கள் அவர்களை ஒளிப்படம் எடுத்ததைப் பார்த்து பயந்து ஒளிந்துகொண்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு அது என்ன என்று புரிய வைத்த பிறகுதான் எங்கள் அருகில் வந்தார்கள். என் வாழ்நாளில் என்னால் முடிந்த அளவிற்கு ‘டிரக்கிங்’ செய்ய வேண்டும். பிறகு பாராச்சூட்டிலிருந்து குதிக்க வேண்டும்!’ என்று கவுசல்யா துணிச்சலாகக் கூறுகிறார். றீ