வாசகர் மடல்

அக்டோபர் 16-31 2019

 

‘விடுதலை’, ‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ செப்டம்பர் 16-30, 2019 இதழைப் படித்தேன். இதழில் இடம் பெற்றிருந்த அனைத்தும் அருமை. ஒவ்வொரு கட்டுரையும், கவிதைகளும் சிந்திக்கத்தக்க வகையில் இருந்தன. இம்மாத தொடக்கத்தில் தாம் கலவரத்தை உண்டாக்கும் பிள்ளையார் சிலை ஊர்வலம் நடந்து முடிந்தது. மக்களை பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற நினைப்பவர்களின் தந்திர யுக்தியாக அதுவுள்ளது.

ஆனால், திராவிட இயக்கங்களோ, அதற்கு நேர்மாறாக மக்களனைவரையும் ஒருங்கிணைக்க பல்லாண்டு காலமாக முயற்சி செய்து கொண்டுள்ளன. ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன. இதற்கு பெரும் ஆபத்து இக்கிருமிகளால் ஏற்பட்டுள்ளது. அவர்களது சனாதனத்தின் குறியீடான பிள்ளையார் சிலை ஊர்வலத்தை நடத்தும்போது, திராவிடர் கழகம் அதற்கு எதிராக புத்தர், பெரியாரின் கைத்தடி ஊர்வலத்தை நடத்த வேண்டும்; நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயமும்கூட! ஆகவே, தாங்கள் எப்படியாயினும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சனாதன எதிர்ப்பு ஊர்வலத்தினை நடத்திடல் வேண்டும். இதில் மனிதத்தின் பால் நம்பிக்கையுள்ளோர் அனைவரும் இணைவர்.

இங்ஙனம்,

ப. கார்த்தி,

உலகபுரம், ஞானிபாளையம்,

ஈரோடு – 638 112.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *