- கே: கூட்டணி சேர்ந்தவுடனே அ.தி.மு.க. தலைவர்கள் மோடியைப் புகழத் தொடங்கிவிட்டனரே, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்
களைச் செய்துவரும் பி.ஜே.பி.யை மக்கள் மறந்துவிடுவார்களா? மக்களை ஏமாளிகளாக நினைக்
கிறார்களா?
– கலைமதி, வேலூர்.
ப: அதன் ‘விளைச்சல்’ அ.தி.மு.க. முக்கியத் தலைவர், முன்னாள் அமைச்சர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தற்காலிக ஆதாயம்; கட்சி அதல, பாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது.
அ.தி.மு.கவில் ‘அண்ணா’ ‘அம்மா’வும்
மறைந்து, அமித்ஷா ஆணையை
ஏற்கும் அ.தி.மு.க.வாக ஆகிவிட்ட
பரிதாப நிலை! தொண்டர்களுக்கும் கொள்கைக்கும் பெரும் நட்டம் – வழக்கு நிலுவை, வருமானவரி, அமலாக்கத்துறை தொந்தரவு ஆகியவை வருகின்ற தேர்தல் வரை தள்ளி வைப்பு என்ற ‘லாபம்’ அ,தி.மு.க. தலைமைக்கு! கட்சி ‘அரோகரா’ ‘வாதாபி ஜீரணாபி’ ஏப்பம்.
தமிழ்நாடு எப்போதும் பெரியார் மண்தான். அரசியல் அவசர சிகிச்சைப்
பிரிவில் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. சேரவேண்டிய நிலை ஏற்படும். அதுவரை புது வசை மொழிகள் முதலமைச்சர் ஸ்டாலின்மீது, உண்மை திராவிட இயக்கங்கள் மீதும் பாடுவது ஓங்கும்!
தி.மு.கவின் அமோக வெற்றிக்கு முதல் திறவுகோலே இந்தப் பொருந்தாக் கூட்டணிதான்.
- கே: மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயல் விளக்கப் பிரச்சாரங்களைக் கிராமந்தோறும் மக்களைக் கவரும் வகையில் திட்டமிட்டு தொடர்ந்து செய்வீர்களா? இன்றைக்கு அது கட்டாயத் தேவையல்லவா?
– சங்கர் அப்பாசாமி, அரியலூர்.
ப: வேடிக்கையான கேள்வி இது! அன்றாடம் மூச்சு விடுவீர்களா என்று கேட்கிறீர்கள். நமது மூச்சே நிற்கலாம். ஆனாலும், அதன்பிறகும் இப்பிரச்சாரம் வான்மழை போல தொடரும். இதில் என்ன சந்தேகம்?
- கே: மூன்று வயதுக் குழந்தைக்குக் கூட உணவு கொடுக்காது கொன்று, மோட்சம் அடைய முயலும் முட்டாள்
தனம், இந்த அறிவியல் உலகில் நடப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– தமிழ்ச்செல்வி, திட்டக்குடி.
ப: நமக்குள்ள – இயக்கத்திற்குள்ள கடமையும் பொறுப்பும் மேலும் மேலும் தேவை என்பதை உணர்த்து
கிறது. நாட்டுக்கும் கூட அந்தக் கடமையும் பொறுப்பும் அவசியம் என்பதையும் வற்புறுத்துகிறது இந்த முட்டாள்தனம்!
- கே: பிரதமர் மோடி நேரில் இலங்கை அதிபருடன் பேசிய பிறகும், தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிரான செயல்கள் தீவிரமாவது எந்தத் துணிவில்? நாடகமாடுகிறார்களா? தமிழ்நாடு மீனவர்களுக்கு ஆதரவாய் மிகப் பெரிய போராட்டம் தமிழ்நாடு அளவில் நடத்தப்பட வேண்டுமா?
– இரவீந்திரன், ஊற்றங்கரை.
ப: 1. ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீனவர் நலன்களை விருப்பு, வெறுப்பின்றிப் பார்த்து, இலங்கை அரசுக்குச் சரியான தடுப்பு
நடவடிக்கைகளை அந்த ஒன்றிய
ஆட்சி தரும் நிலை உருவாக
வேண்டும்
- கச்சத்தீவை மீண்டும் பழையபடி திருப்பிப் பெற்றாக வேண்டும்.
- கே: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் தாக்குதலைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை.
ப: பதிலடி தேவைதான் – இப்போது எந்த நாடானாலும் அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாத வெறிக்குத் தக்க பதிலடியாக இருப்பது
தேவை – இந்தப் படிப்பினை பாகிஸ்தானுக்கும் தேவை. விரைவில் உணர வைக்கலாம். ஆனால் எல்லையோர நம் மக்களுக்குத் தொல்லையாக வேறு ஆபத்தினை, விளைவுகளை உருவாக்கும் முழுப் போராக மாறாமல் இருப்பதும் அவசியம். ஒன்றிய அரசுக்கு இப்போது இப்பிரச்சினையில் துணை நிற்பது நமது கடமை.
- கே: அரசியல் கட்சி நடத்தும் ஒரு நடிகர் படப்பிடிப்பிற்குச் செல்வதை மணிக்கணக்கில் நேரலை செய்து ரசிகர்களின் ஆர்ப்பரிப்பைக் காட்டும் தொலைக்காட்சிகள், நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற, முதல்வருக்கான வரலாற்றுச் சிறப்பு
மிக்க பாராட்டு விழாவை நேரலை செய்யாதது எதை உணர்த்துகிறது?
– த.மணிமேகலை, வீராபுரம்.
ப: ஒப்பனைகளுக்கு உள்ள தற்காலிக
மதிப்பும் கவர்ச்சியும், உண்மைக்கு
இருப்பதில்லை. ஒப்பனைகளால் Ratingஇல் வாழும் தொலைக்
காட்சிகளும், பெருமுதலாளிகளும், பா.ஜ.கவின் புன்சிரிப்புப் பெற ‘இத்தியாதி! இத்தியாதி!’ என்பதை உணர்த்துகிறது!
- கே: மாணவர்கள் பாடங்களைக் கற்பதோடு சமூகநீதி, இட
ஒதுக்கீடு பற்றிய அறிவையும் வளர்த்
துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளது நடைமுறைக்கு வர பாடத்திட்டத்
திலும் மாற்றம் வேண்டும்; பயிற்சி வகுப்புகளும் தேவையல்லவா?
– கவின் கிஷோர், படப்பை.
ப: பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழு (Academic Council) கவனத்திற்குத் துணைவேந்தர்கள் இதைக் கொண்டு சென்று வற்புறுத்தி பாடத்திட்டத்தில் மாற்றத்தை அவசியம் உருவாக்க வேண்டும். m