அய்.நா. பொதுச்சபை 16.12.1966 அன்று ஏற்றுக்கொண்டதும், 23.12.1976 முதல் நடைமுறைக்கு வந்ததுமான குடிஉரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்.
முகப்புரை
இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள்
- – அய்.நா. மன்ற அமைப்புத்திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும்,
– இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை ஒப்புக்கொண்டும்,
-மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனப்படி சுதந்திர மனிதர்கள் அச்சத்திலிருந்தும் தேவையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் அரசியல் உரிமை, குடிமகன் உரிமை ஆகியவற்றையும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே அடைய முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டும்,
– அய்.நா. அமைப்புத் திட்டத்தின்கீழ் மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உலகு தழுவிய மரியாதையும் அமலாக்கமும் குடியுரிமையும் அரசியல் உரிமையும்… ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடப்பாடு என்பதைக் கருதிப் பார்த்தும் தனி மனிதனும் பிற தனி மனிதர்களுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டவன் என்கிற முறையில் இங்கு குறிப்பிடப்பெறும் உரிமைகளைப் பரப்பவும் அங்கீகாரத்துக்கு உதவவும் கடமைப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்தும் கீழ்க்கண்ட விதிகளுக்கு உடன்படுகின்றன.
பகுதி 1 – விதி 1
1. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின்படி அவர்கள் விருப்பம் போல் தமது அரசியல் நிலையை நிர்ணயித்துக்கொண்டு தம் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.
2. சர்வதேச சட்டத்தையும் பரஸ்பர நன்மை என்ற தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழும் பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவினால் உருவாகும் கடமைகளுக்கு ஊறுவிளையாத வகையில் தமது இயற்கைச் செல்வங்களையும் பொருளாதார சக்திகளையும் தமது நன்மைக்கேற்ப ஏதும் செய்துகொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. தாம் பிழைத்திருப்பதற்கான பொருளாதார வழிவகைகள் எந்த மக்களிடமிருந்தும் பறிக்கப்படுவதென்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
3. சுய ஆட்சி பெறாத பகுதிகள், அறங்காவலர் முறையில் ஆளப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பான அரசுகள் உள்பட இவ்வுடன்படிக்கையில் இணையும் அரசுகள் அனைத்தும் சுயநிர்ணய உரிமையை அனைவரும் அடைவதைப் பரப்பவும் அய்.நா. பிரகடன விதிகளுக்கு ஏற்ப அவற்றை மதிக்கவும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றன.பகுதி 2
- விதி 21. தனது எல்லைக்குள்ளும் அதிகார எல்லைக் குள்ளும் உள்ள அனைவருக்கும் இனம், நிறம், பால், மொழி, மதம் அரசியல் கருத்து அல்லது வேறு வித கருத்துக்கள், தேசிய அல்லது சமூகத் தோற்றம், பிறப்பு, சொத்து அல்லது அதுபோன்ற கவுரவங்கள் என்ற எவ்வகை பேதமுமின்றி இவ்வுடன்படிக்கையில் அடையாளங் காட்டப்
பெறும் அனைத்துரிமைகளும் உண்டென்பதை மதித்து அவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதென்று இவ்வுடன்படிக்கையில் சேரும் அனைத்து அரசுகளும் வாக்குக் கொடுக்கின்றன.2. சட்டத்தின் மூலமோ வேறு வகையாகவோ ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிராவிட்டால், தத்தம் பகுதிகளில், தத்தம் அரசியலமைப்புக்கும், இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கும் ஏற்ப, இந்த அரசுகள் தம் நாடுகளில் இவ்வுடன்படிக்கையில் காணப்பெறும் உரிமைகள் எளிதில் நடைமுறையில் கிடைக்க, சட்டமியற்றியோ வேறு வழியிலோ தேவையான நடவடிக்கைகள் எடுப்போமென்றும் உறுதியளிக்கின்றன.3. (அ) யாரைப் பொறுத்தேனும் இங்கு அங்கீகரிக்கப்படும். உரிமையோ சுதந்திரமோ மீறப்படுமானால், அந்த மீறல் அரசின் சார்பாக ஒருவரால் எடுக்கப்படும் நடவடிக்கையாயிருப்பினும்கூட, பாதிக்கப்பட்டவருக்கு பயனுள்ள நிவாரணம் கிடைக்கவும்.
(ஆ) அப்படி பரிகாரம் தேடுகிறவர், அவருடைய உரிமையை நிர்ணயிக்க நீதிமன்றம், நிருவாகத்துறை, சட்டமன்றம் அல்லது அவ்வரசின் அமைப்பியல் உருவாக்கியுள்ள வேறு எந்த அமைப்பின் உதவியைப் பெறும் உரிமையையும், குறிப்பாக நீதித்துறையில் இதற்கான வழிவகைகளை உருவாக்கவும், ஆவன செய்யவும் இவ்வரசுகள் உறுதியேற்கின்றன. - விதி 3
இவ்வுடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பெறும் குடிஉரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை ஆண்களோடு பெண்களும் சரிநிகர்சமானமாக அனுபவிக்க வகைசெய்யவும் இவ்வரசுகள் உறுதியேற்கின்றன. - விதி 4
1. தேசத்தின் உயிரையே பாதிக்குமளவிலான பொது நெருக்கடி நிலை நிலவி, அதிகாரபூர்வமாக அத்தகு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இவ்வரசுகள் நிலைமையின் தீவிரம் எவ்வளவு தேவை என்று காட்டுகிறதோ அந்த அளவு மட்டுமே, இவ்வுடன்படிக்கையின்படி அவற்றின் கடமைகளாய் அமைகின்றவற்றுக்கு குடியுரிமையும் அரசியல் உரிமையும்…
எதிரான நடவடிக்கைகளில் இறங்கலாம். அப்போதும்கூட சர்வதேசச் சட்டத்தின்கீழ் அவற்றுக்கு உள்ள கடமைகளை மீறாமலும் இனம், நிறம், பால், மொழி, மதம், எந்த சமூகத்தினன் என்பது போன்ற எந்தவிதமான பேதங்களும் காட்டப்படாமலும் அந்நடவடிக்கைகள் அமைய வேண்டும். - பகுதி 3 – விதி 6
1. உயிர்வாழும் உரிமை ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே உரியது. அதற்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும். யார் உயிரும் சட்டவிரோதமாகப் பறிக்கப்படலாகாது.
2. மரணதண்டனை ஒழிக்கப்படாத நாடுகளில், மிகமிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். அதுவும் குற்றம் நடந்த காலத்திய சட்டத்தின் படியும், இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கோ, இனக்கொலை பாதகத் தடுப்பும் தண்டனையும் பற்றிய கொள்கையின் விதிகளுக்கோ முரணாக அது அமைந்திடக்கூடாது.
4. மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்புக்கோரவும் தண்டனைக் குறைப்பு கோரவும் உரிமையுண்டு. எந்த வழக்கிலும் பொதுமன்னிப்பு அல்லது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்படலாம்.
5. பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களுக்கும், கர்ப்பமாயிருப்போர்க்கும் மரணதண்டனை வழங்கப்படலாகாது. - விதி 7
1. யாரும் சித்திரவதைக்கோ, கொடுமையாக அல்லது மனிதத் தன்மையின்றி அல்லது கண்ணிய
மற்ற முறையில் நடத்தப்படலாகாது; யாரும் அவரது சுதந்திரமான ஒப்புதலின்றி மருத்துவ சோதனைகளிலோ அறிவியல் சோதனைகளிலோ ஈடுபடுத்தப்படக்கூடாது. - விதி 8
1. யாரும் அடிமைப்படுத்தப்படக்கூடாது. அனைத்துவித அடிமை முறையும் அடிமை வணிகமும் ஒழிக்கப்படவேண்டும்.
2. யாரும் கொத்தடிமைகள் வைத்துக்கொள்ளலாகாது.
3. (அ) யாரையும் கட்டாயப் பணியாளராகவோ, நிர்பந்தப் பணியாளராகவோ வைத்திருத்தல் கூடாது. - விதி 9
1. ஒவ்வொருவருக்கும் சுதந்திரத்துக்கும் உடல் பாதுகாப்புக்கும் உரிமை உண்டு. யாரும் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படவோ, சிறைவைக்கப்படவோ ஆகாது. சட்டம் விதித்துள்ள காரணங்கள் அன்றியோ, அது கூறும் முறைகளில் அல்லாமலோ யாருடைய சுதந்திரமும் பறிக்கப்படலாகாது.
2. ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கைது செய்யப்படுவதற்கான காரணமும், அவர் செய்ததாகக் கருதப்படும் குற்றம் என்ன என்பதும், அவருக்குக் கூறப்பட வேண்டும்.
3. குற்றச்சாட்டின்கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டாலோ, சிறைப்பிடிக்கப்பட்டாலோ குறித்த காலத்துக்குள் நடுவர் முன்னிலையிலோ அல்லது
சட்டப்படி இதற்கான அதிகாரம் பெற்ற நீதித்துறையாளர் முன்போ அழைத்துச் செல்லப்பட வேண்டும்.
நியாயமான காலவரையறைக்குள் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.
4. கைது செய்யப்பட்டோ சிறை செய்யப்பட்டோ தன் உரிமையை இழக்கும் ஒருவர் நீதிமன்றத்துக்குத் தன் குறையை எடுத்துச் செல்ல உரிமை உண்டு. நீதிமன்றம் தாமதமின்றி அந்தக் கைது சட்டப்படி செல்லுமா என்று தீர்மானிக்க அது உதவும் தவறென்று தீர்மானித்தால் நீதிமன்றமே அவரை விடுவித்து ஆணையிடும்.
5. அப்படி பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கோரவும் உரிமை உண்டு. - விதி 10
1. கைதாகும் எவரும் மனிதப் பண்போடும் மனிதப் பிறவிக்கே உரிய உள்ளார்ந்த மதிப்புக்கான மரியாதையோடும் நடத்தப்படவேண்டும்.
2. (அ) விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர பொதுவாக எப்போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் தண்டிக்கப்பட்டவர்களும் தனித்தனியே தான் வைத்திருக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட்டவரல்ல என்ற தகுதிக்கேற்ப அதற்குரியபடி வித்தியாசமான முறையிலேயே நடத்தப்பட வேண்டும்.
ஆ. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குள், சிறுவர்களும் வயது வந்தவர்களும் தனித்தனியே வைக்கப்பட்டு, நடுவர் முன்பும் கூடியவரை தனிதனியாகவே அழைத்துச் செல்லப்படவேண்டும்.
3. சிறைச்சாலை முறையானது கைதிகளைச் சீர்திருத்துவதையும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதையுமே நோக்கமாக வைத்து அவர்களை நடத்தவேண்டும். இளங்குற்றவாளிகளும் வயது வந்தவர்களும் தனித்தனியே வைக்கப்பட்டு, அவர்களுடைய வயதுக்கும் சட்ட அந்தஸ்துக்கும் ஏற்ப நடத்தப்படவேண்டும்.