ஆசிரியர் பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் செப்டம்பர் 1-15,2023
முதல்வர் கவனத்திற்கு…
1. கே: ஆளுநரைக் கேள்வி கேட்டது, ஒன்றிய அரசின் ஊழியரின் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற காவிகளின் கோரிக்கை சரியா?
– வெங்கடேசன், திருமுல்லைவாயல்.
ப: முட்டாள்தனம் நிறைந்தது; சட்டத்தின்முன் நிற்காது. ஆளுநரே பெற்றோர்களை வரவழைத்துள்ளபோது,  கருத்துக் கூற ஒரு பெற்றோருக்கு முழு உரிமை உண்டே! பின் எப்படிக் குற்றமாகும்?
2. கே: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் ஆத்துப் பாக்கத்தில் நாகரிகமாக வாழ்வதால் மலைக்குறவர் மக்களுக்குப் பழங்குடி 
(S.T.)சான்றிதழ் வழங்க முடியாது என்று அரசு அலுவலர் கூறியுள்ளது சரியா? அதே மாவட்டத்தில் அம்பத்தூரில் ஷி.ஜி. சான்று வழங்கப்பட்ட  நிலையில் இந்த மறுப்பு தப்பு அல்லவா?
– சரோஜா, வேலூர்.
ப: தவறு. கொடுமையான இதை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சரி செய்வதோடு, உடனடியாக அத்தகைய அதிகாரிமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் கவனத்திற்கும் இது எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
3. கே: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்போம் என்ற பயத்தில், கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் கருத்துத் திணிப்பைச் செய்து, மக்கள் மனத்தை மாற்ற – குழப்ப – பா.ஜ.க. முயற்சி செய்யும் நிலையில், அதை முறியடிக்க சரியான செயல் திட்டமும், முயற்சியும் மிழிஞிமிகி கூட்டணிக்கு கட்டாயம் அல்லவா?
– பாலாஜி, திருப்பூர்.
  ப:  நிச்சயம் அதற்குரிய அரசியல் வியூகத்தை INDIA கூட்டணி செய்யும்!
4. கே: காவிரிச் சிக்கலில் நிரந்தரத் தீர்வுக்கு என்ன வழி? நீர் திறப்பு அதிகாரம் பொதுவான அமைப்பிடம் தானே இருக்க வேண்டும்? அதற்கு வழி செய்ய முடியுமா?
– ஜானகி, குடியாத்தம்.
ப: காவிரி ட்ரிபியூனலுக்கு முழு அதிகாரம் வழங்கிடவும், காவேரி பள்ளத்தாக்கு (Valley Authority) ஆணையம் அமைத்து, சுதந்திரமாக இயங்கி செயல்படுத்திடவும் அதிகாரம் வழங்க வேண்டும்.
5. கே: நீதியரசர் சந்துரு அவர்களின் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்ற திருமா அவர்களின் வேண்டுகோள் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– ப்ரியா, வேப்பம்பட்டு.
ப: குறிப்பிட்ட நிகழ்வுக்காக என்று தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தேவையில்லை. நிலைமையை அறிந்து சிறப்பான _ ஆக்கப்பூர்வமான யோசனைகளை அவர் நிச்சயம் வழங்குவார்.
6. கே: 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை மாநிலக் கல்விக் கொள்கையையே தடையின்றிப் பின்பற்றப்பட மாநில அரசு செய்ய வேண்டியது என்ன?
– மனோஜ், ஆவடி.
ப: இப்போதுள்ள நிலையையே தொடர வைக்க வேண்டும்.’Status quo’ தேவை.
7. கே: தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் பணிக்கு அரசு செய்யும் பரிந்துரையை மறுக்கும் ஆளுநருக்கு எதிராய் சட்டப்படி தீர்வு உச்சநீதிமன்றத்திலா? அல்லது வேறு வழியுண்டா? பணி நியமனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதற்குத் தீர்வு என்ன?
– தனலெட்சுமி, தாம்பரம்.
ப: வழிகள் ஏராளம் உண்டு. பொறுத்திருந்து பாருங்கள். தமிழ்நாடு அரசு தீர்வு காணும்.
8. கே: உடனடியாக நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்கள் பற்றிய கருத்துக் கணிப்பு வெளியிடாமல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பற்றி, இன்னமும் கூட்டணி முடிவாகா நிலையில் கருத்துக் கணிப்பு வெளியிடுவது மக்களை ஏமாற்றும் முயற்சிதானே?
– சின்னப்பொண்ணு, வேலூர்.
  ப: ஊடகங்களில் பல கார்ப்பரேட் முதலாளிகளால் நடத்தப்பெறுபவை. அவை பா.ஜ.க.விடம் குத்தகைதாரர்களாய் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள நிலையில் இப்படித்தான் நடக்கும். மக்கள் அந்தக் கருத்துக் கணிப்பைப் புறந்தள்ளுவார்கள்.
9. கே: ‘‘வைக்கம் போராட்ட வரலாற்றை’’ பள்ளி, மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைத்திட தாங்கள் முதலமைச்சரை வலியுறுத்திக் 
கேட்டுக்கொள்வீர்களா?
– சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை.
ப: ஏற்கெனவே தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனமும் பள்ளிக் கல்வி அமைச்சரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.