திராவிடர் இயக்கங்களான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம்,
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகங்களால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளை
திரைப்படங்களில் முதன்முதலில் கொண்டு வந்தார். கலைவாணரின் சிறப்பு என்பது ‘திரைப்படத்துறை’யில் அறிவுப் பிரச்சாரம் செய்ததும், அத்துறையில் ஈட்டியதை, வாரி வழங்கியது என்பதாகவும்தான் அமைந்துள்ளது.
கலைவாணர் ஒரு தனி மனிதரல்லர்; அவர் ஒரு சகாப்தம்! அவரோடு அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு சகாப்தம் இனி தோன்றுவது கடினம்.
என்னுடைய ஆசிரியர் ‘குடி அரசு’ என்று கூறிய கொள்கைக் கோமான்!
திராவிடர் இயக்கக் கருத்துகளை முதன்-முதலில் திரைப்படத்தில் எதிரொலித்த மனிதரை, சிறந்த கருத்துகளை பாமர மக்களிடம் உயர்ந்த நகைச்சுவையின் மூலம் சேர்ப்பித்த சிந்தனையாளரை, நாம் நினைவு கூர்வது வியப்பல்லவே! வாழ்க கலைவாணர் புகழ்!
தொகுப்பு: கொ. இரவிந்திரன், கழனிப்பாக்கம்