Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நினைவு நாள்: ஜூலை-17 திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்

“டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி. தியாகராய செட்டியாருடன் இணைந்து நின்று பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மாவீரர் ஆவார். தோற்றுவித்தது மட்டுமல்ல! திறம்பட இயங்கிவரச் செய்த செயல் வீரருமாவார். திராவிடரின் நலிந்த வாழ்வை நல்வாழ்வாக்கிய உத்தமர்! சூத்திரரெனவும் பறையரெனவும் தாழ்ந்து நின்ற திராவிட சமுதாயத்தினரை மானமிகு மனிதராக்கிய சமுதாயச் சிற்பி! பிராமணரின் ஜாதிவெறியை அடக்கி, எவரும் சூத்திரன் என்றோ, பறையன் என்றோ உச்சரித்திடவும் அஞ்சும்படி செய்திட்ட அஞ்சா நெஞ்சத்தவர்.
– தந்தை பெரியார்