எம்.ஜி.ஆர்.கோடம்பாக்கம் ஹைரோடு வழியாக ஸ்டூடியோவுக்குப் போகும் போது பலமுறை சர்ப்ரைஸாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்படி ஒரு நாள் அவர் கிருஷ்ண ஜெயந்தியன்று வந்திருந்தபோது, எங்கள் வீட்டு வாசலில் தொடங்கி, பூஜை அறை வரை நெடுக கிருஷ்ணர் பாதங்கள் வரைந்திருந்தோம்.உள்ளே நுழைந்ததும்
அவர், என்ன இதெல்லாம்? என்று கேட்க, நான், இன்று உங்களுக்கு நம்பிக்கை இல்லாத கிருஷ்ணர் பிறந்த நாள்என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே, எனக்கு நம்பிக்கை இல்லாத என்று சொல்லாதீர்கள்! ஒன்றே குலம்;ஒருவனே தேவன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு; அவருக்கு ராமர், கிருஷ்ணர் என்று பெயரிடுவதில்தான் நம்பிக்கை இல்லை என்று சொன்னார். இதைக் கல்கி(15.4.2012)யில் கூறியிருப்பவர், திரைப்படத்துறை மூலம் எம்.ஜி.ஆருடன் நட்பில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி. எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி அ.தி.மு.க.தான் இங்கு ஆட்சி செய்கிறது. அதன் தலைவரான ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ராமர், கிருஷ்ணர் மீது நம்பிக்கை இல்லை என்பதை அறிவாரா? அந்தக் கட்சியின் தொண்டர்கள் தான் அறிவார்களா? ராமன் பாலத்தை தேசியச் சின்னம் ஆக்கவேண்டும் என்று கூறுவதும், கிருஷ்ண ஜெயந்திக்கு அரசு விடுமுறை விடுவதும் தனது தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு எதிரானதல்லவா?