நெசந்தானுங்க..

ஏப்ரல் 16-30

– பவானந்தி

நாங்கதான் நம்பர் ஒன்னூ தெரியும்ல!

இந்த மோடி ஆதரவு குரூப் எப்பவும், குஜராத் முதல்வர் மோடி தான் நம்பர் ஒன்னு-ன்னே சொல்லிக்கிட்டு அலைவானுங்க… அதிலயும் தினமலர் படிக்கிற தெளிவான குடிமகன் ஒருத்தர்கிட்ட மாட்டிக்கிட்டேன். அவரும் உ.பா.வோட இருந்தாரு…

பாஸ்… பார்த்தீங்கள்ல… இண்டியாவிலாயே மோடி தான் சார் நம்பர் ஒன்னுன்னு ஆரம்பிச்சாரு.

ஆமாம்பா… நீங்க நம்பர் ஒன்னு! ஆனா கொலையில, திட்டம் போட்டு மதக்கலவரம் பண்ணுனதில, மாட்டுக்கு பதிலா மனுசனையே வச்சு ஏர்பூட்டி உழுததுல, எம்.எல்.ஏ வண்டியிலயே கள்ளச்சாராயம் கடத்தினதில, போலி என்கவுண்டர் பண்ணுனதில இப்படி விசயங்கள்ல நீங்க தான் நம்பர் ஒன்னு! அப்படின்னு எடுத்துச் சொன்னேன்.

ஆனாலும் கேட்க மாட்டாய்ங்க… பாத்தீங்கள்ல… இந்தியா டுடேயில போட்டிருக்காக, தினமலரு பாராட்டுறாக, நியாயவாதி சோ பாராட்டுறாக, இன்னும் எங்க சார்பான நடுச்செண்டர் நாயகர்களெல்லாம் பாராட்டுறாக… பிரதமர் பதவிக்கு வாப்பா மோடி அப்படின்னும் தூக்கி வச்சுக்கிட்டே திரியிறானுக… ன்னார்
உங்க சார்பான நடுச்செண்டர் வாதிகள்லாம் சரி, உங்க கூட்டணிக் கட்சிக்காரரு நிதிஷ் குமாரே, உங்காள அவரு பிரச்சாரத்துக்கே வேண்டாம்னு சொன்னாரே! அப்படின்னு கேட்டா…

நாளைக்கு பிரதமர் ஆயிட்டோமுன்னா யாரு சொல்லுவா நாங்க பார்க்கிறோம்… ஆகிறோம்டா பி.எம்.மு! அப்படின்னு தெலுங்கு பட வில்லன் ரேஞ்சுக்கு அலப்பறையைக் கொடுத்தாங்க…

ஏப்பா.. குஜராத் மக்கள் படுற பாட்டையெல்லாம் பத்திரிகைகள் கிழிகிழின்னு கிழிச்சு எழுதுதே… கள்ளச்சாராயம் பெருகிக்கிடக்குன்னு கேட்டா…

குஜராத் தொழில் வளர்ச்சியில முன்னேற்றம் தெரியுமா? காந்தி பிறந்த மண்ணுக்கு பெருமையே எங்காளுதான். ஜெ அம்மாவே தோட்டத்தில கூப்பிட்டு விருந்து வச்சாங்க தெரியும்ல… அம்மாவுக்கு நர்சு அனுப்பினது கூட எங்காளுதான்!னு பெருமையா சொல்லிக்கிட்டே, மிச்சமிருந்த சரக்கை உள்ள தள்ளினாரு மோடிஜாடிக்காரரு… (மோ.ஜா.)

காந்தி கொள்கை வாழுறதுதான் தெரியுதேன்னு அவரு கையில இருந்த பாட்டிலைப் பார்த்து சலிச்சுக்கிட்டு சொன்னா, எதையுமே எங்காளு தான் முன்மாதிரியா செய்வாரு… இவ்வளவு ஏன் ச்சும்மா 50 ஓவர் விளையாடிக்கிட்டிருந்த கிரிக்கெட்டை 20 ஓவருக்கு மாத்தி அய்.பி.எல்-லுன்னு புதுசா கிரிக்கெட்டையே மாத்தினது எங்க மோடி தான் தெரியும்ல… அதிலையும் நாங்க தான் நம்பர் ஒன்னுங்கிறாரு…

ஆகா.. மப்பு ஜாஸ்தியாயிருச்சு போலிருக்கே… யப்பா அது நரேந்திர மோடி இல்ல… லலித் மோடி! அவரு தான் கோடி கோடியா கொள்ளை யடிச்சிட்டாருன்னு துரத்தி தேடிக்கிட்டிருக் காங்களே! ன்னு சொல்லிட்டிருக்கும் போதே அப்படியே நகர்ந்து போஸ்ட் கம்பி ஓரமா போனாரு என்னப்பான்னு கேட்டா, நம்பர் ஒன்னுன்னு விரலைக் காண்பிச்சுட்டு, மூச்சா போயி சுவத்தை நாறடிச்சுட்டு திரும்ப வந்தாரு மோ.ஜா…

இதில தாண்டா நம்பர் ஒன்னு நீங்க… மாட்டு மூத்திரத்தக் கூட ஏற்றுமதி பண்ணலாம்னு சூனா.சாமி வேற சொல்றாரில்ல… நீங்க நம்பர் ஒன்னு தாண்டா!

ஆனா உண்மை தான்.. உங்காளு இப்போ நம்பர் ஒன்னா வந்திருக்கிறாருங்கிறதுன்னேன்…

அப்படி வாங்க வழிக்கு…ன்னான்..

ஆமா… டைம் பத்திரிக்கை நடத்தின கருத்துக் கணிப்புல.. உலகத்தில் அதிகமா ஆட்களால் வெறுக்கப்படும் நபர்ங்கிறதில முதல் இடம்… உன் பாசையில நம்பர் ஒன் – மோடி தான்!ன்னதும்

வடிவேலு ஸ்டைல்ல ஒத்துக்கிறேன்… நெக்ஸ்ட் மீட் பண்றேன்னு சொல்லிக்கிட்டே எஸ்கேப் ஆயிட்டாரு மோ.ஜா – மதக் கலவரம், போலி என்கவுண்டர் படுகொலைகள்னு எஸ்கேப் ஆகிக்கிட்டிருக்கிற மோடி மாதிரியே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *