பாலத்தை அவ்வளவு பலமாக கட்டின ராமர் அப்படியே ஊர் பூரா பப்ளிக் கக்கூசையும் கட்டிக்கொடுத்திருக்கலாம்…
இடிஞ்சு போகாம பலவருஷம் தாக்குப்பிடிச்சுக்கும்..
அதையும் தேசிய சின்னமாக அறிவிச்சுருக்கலாம்…
– சித்தன் கோவை 2012 மார்ச் 28 இரவு 7:42 மணி
2025ஆம் ஆண்டில் மகனிடம் அப்பா…
டேய்.. சத்தியமா நம்புடா… ஆயிரம் முறை சொல்லிட்டேன். உன்னை நாங்க பெத்தோம்டா.. டவுன்லோடு பண்ணலை.. – கோவி லெனின் 2012 ஏப்ரல் 6 இரவு 10:26 மணி
கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு நண்பருக்கும் எனக்கும் கடவுளின் தேவையைப் பற்றி சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல் கீழே. அவர்: என் மகன் வண்டி எடுத்துட்டுப் போகும் போது அவனுக்கு விபத்து ஏற்பட்டுருமோனு எனக்கு பயமா இருக்கும். அந்த பயத்தை என் கடவுள் மேலபோட்டுட்டு நான் நிம்மதியா இருப்பேன். நீங்க உங்க பயத்தை எங்க போடுவீங்க? எப்படி நிம்மதியா இருப்பீங்க? அதுக்குதான் கடவுள் தேவைனு சொல்றேன்.
நான்: நான் என் பையனுக்கு போக்குவரத்து விதிகளை எல்லாம் சொல்லிக் கொடுத்து, அதை பின்பற்றாதப்ப வரும் தீமைகளையும் விளக்கி பயத்தை அவன் தலைல போட்டுட்டு நான் நிம்மதியா இருப்பேன். அவனும் ஒழுங்கா வீடு வந்து சேருவான். அவன் அவன் பயம் அவன் அவன் தலையில தான் இருக்கனும்! அதுக்குதான் கடவுள் தேவையில்லேனு சொல்றேன்!
பின் இருவரும் சிரித்தபடி தேநீர் அருந்தினோம்! கடவுளின் தேவையைப் பற்றிய முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்! 🙂 – டான் அசோக் 2012 ஏப்ரல் 2 அதிகாலை 4:43 மணி
எதுக்கு இந்த மானம்கெட்ட பொழப்பு…
செய்தி: பா ஜ க சார்பில் தமிழ்த் தாய் ரத யாத்திரை திருவெற்றியூரில் தொடங்கப்பட்டது, இது தமிழகம் முழுவதும் சென்று தமிழின் பெருமையை உணர்த்தும் என்று இல. கணேசன் கூறினார்.//
சிந்தனை: ஓஹோ அப்படியா! அப்படியானால் இந்த ரதயாத்திரையின் மூலமாக கோயில்களில் அர்ச்சனை மொழியாக தமிழை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த முடியுமா? இல்லை …தமிழ் புத்தாண்டு என்று சொல்லப்படும் அறுபது ஆண்டுகள் ஏன் தமிழிலே இல்லை என்றுதான் கேள்வி கேட்க்க முடியுமா? அது கிடக்கட்டும் குறைந்தபட்சம் உங்கள் நாடகத்தின் பெயரான ரத யாத்திரை என்ற வட மொழி சொல்லை தேர் வலம் என்றாவது தமிழிலே சொல்ல முடியுமா? இந்தியா முழுவதும் பாரத மாதாவின் பெயரைச் சொல்லி ரத்தம் குடித்த ஓநாய்கள் இப்பொழுது தமிழ் தாயின் பெயரைச் சொல்லி தமிழ் நாட்டில் ரத்தம் குடிக்க ஆசைப் படுகிறது.. எதுக்கு இந்த மானம்கெட்ட பொழப்பு… நான் திராவிடன் – 2012 ஏப்ரல் 9 – பகல் 11:12 மணி
– ரமேஷ் கருப்பையா 2012 மார்ச் 26 மதியம் 2:53 மணி