பெண்கள் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டனர். அரசியலிலும் உள்ளாட்சி தொடங்கி நாடாளுமன்றம் வரை பொறுப்பேற்கிறார்கள். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர்க்கு இந்த உரிமை வந்த வழி தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முயலுவதில்லை. ஒருசிலர் பெண்ணரிமை கிடைத்த வரலாற்றை அறிந்து எங்கும் பேசுகிறார். அவர்களில் ஒருவராக காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் (பா.ம.க.) திகழ்கிறார். பெண்ணடிமைக்கு எதிராகவும் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் ஊர்தோறும் தந்தை பெரியார் முழங்கிவந்த காலத்தில்தான் என் பள்ளிப்பருவம் அமைந்தது. காஞ்சியில் ஒரு கடைக்கோடி கட்டட மேஸ்திரியின் மகள், பின்னாளில் ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்குக் காரணம் பெரியாரின் உழைப்புதான் என்று தனது ஊர் பற்றிய பேட்டியில் (என் விகடன் 4.4.2012) நன்றியுடன் கூறியுள்ளார். கட்டட மேஸ்திரியின் மகள் அல்லவா. அதனால்தான் தனது அடித்தளத்தை அறிந்து வைத்திருக்கிறார். நன்றி பாராட்டுவோம்.