ஆசிரியர் பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் பிப்ரவரி 16-28, 2023

புத்தாக்கத்திற்கும் இளமைக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் பரப்புரைப் பயணம்.

1. கே: தங்களின் பரப்புரைப் பயணம் இன எதிரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதை, ‘தினமலர்’ ஏட்டின் வன்மத்தின் மூலம் அறிய முடிகிறது. தினமலருக்கு எதிராய் கடும் நடவடிக்கை வேண்டுமல்லவா?
– கார்த்திகா, வேப்பம்பட்டு.
ப:பரப்புரைப் பயணம் – ஒவ்வொரு ஊரிலும்எனது புத்தாக்கத்திற்கும் இளமைக்கும் வழிவகுப்பதால் என்னை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறது. என்னை மட்டுமல்ல, எனது கொள்கைப் பயணத்தில் 25 தோழர்களையும்கூட! வேனில் பயணம் செய்யும்போது புத்தகம் படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும், தோழர்களிடம் கழக வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டும் வருகிறேன். மற்றவைகளில் எனக்குச் கவனச் சிதறல் ஏற்படவில்லை. சில குரைப்புகளை நான் பொருட்படுத்துவதோ கவனிப்பதோ இல்லை.

 

2. கே: வருமான வரிச்சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்வதன் மூலம், வீட்டுக் கடன், ஆயுள் காப்பீடு போன்றவற்றில் சேமிக்கும் அளவைக் குறைத்து, நுகர்வை அதிகரித்து, கார்ப்பரேட்டுகளின் சந்தைக்கு வழிவகுப்பது கேடு அல்லவா?
                                                                                                                                                                                                – வெங்கடேசன், திருவேற்காடு.
ப: சரியான பார்வை உங்களது கேள்வி!கார்ப்பரேட்டுகளின் ஆட்சிதானே இது!வேறு எப்படி இருக்கும்!

 

3. கே: “அரசியல் சார்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகள் ஆவதில் தவறில்லை’’,என்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு
கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? உச்சநீதிமன்றம் இதை ஏற்றிருப்பது சரியா?
                                                                                                                                                                                                  – தங்கமணி, பெரம்பூர்.
ப: நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் சார்பு பார்க்கப்படாமல் இருக்கலாம் – ஆனால் பதவிக்கு வந்தும்கூட, அதே புத்தியோடு இருப்பது தவறாகும். முன்பு பல கட்சியினர் நீதிபதி இடத்தில் அமரும்போது அந்த எண்ணமே வராதவர்களாவும் – துறந்
தவர்களாகவும் இருந்தனர். அப்படித்தான் இருக்கவேண்டும்.

 

4. கே:உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு, மதவெறுப்பில் இஸ்லாமியர்கள்மீது வழக்குகள் போட்டுக் கொடுமைப்படுத்தும் போக்கை உச்சநீதிமன்றம் தலையிட்டுத் தடுக்க, ப. சிதம்பரம் அவர்கள் வைக்கும் கோரிக்கை ஏற்கப்படுமா?
                                                                                                                                                                                                      – ராஜா, அம்பத்தூர்.
ப: ஏற்கப்படுமா என்பதைவிட அதிலுள்ள நியாயங்கள் அடிப்படையில் ஏற்கப்பட்டாக வேண்டும்.

 

5. கே: இராகுல்காந்தியின் நடைப்பயணம், “பொழுதுபோக்கு’’ என்று கொச்சைப்படுத்தும் சங்கிகளின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
                                                                                                                                                                                                     – அ. வெண்ணிலா, திருச்சி.
ப:‘காமாலைக் கண்களுக்குக் காண்பதெல்லாம்மஞ்சளாகவே தெரியும்’ என்பது அனுபவ மொழி – பிறகு என்ன பதில்?

 

6. கே: ஒவ்வொரு கட்சியாகத் தாவியபழம்பெருச்சாளி ஒன்று புதிய கட்சியைத் துவக்கிய சூட்டோடு தி.மு.க.வைப் பி.ஜே.பி.யின் ‘பி.டீம்’ என்கிறதே! தன்னை பி.ஜே.பி.யின் பினாமி என்பதை மறைக்கவா?
                                                                                                                                                                                                       – பாஸ்கரன், புதுச்சேரி.
ப:உங்கள் கேள்வியிலேயே இதற்குப்பதில் இருக்கிறதே!
1. பல கட்சிகள் தாவிய பழம்பெருச்சாளி!
2. புதுக்கட்சி துவக்கம்
3. பி.ஜே.பி.யின் பினாமி
– போதாதா பதில் சொல்லடைவுகள்!

 

7. கே: கங்கையைச் சாக்கடையாக்கும் காவிக் கூட்டம், கலைஞருக்குப் பேனா நினைவுச் சின்னம் கடலில் வைத்தால் சுற்றுச்சூழல் கேடு வரும் என்பது மோசடிப் பிரச்சாரம் அல்லவா? சுற்றுச்சூழல்துறை அனுமதி பெற்றுத்தானே வைக்கப்படும்?
                                                                                                                                                                                                     – தண்டாயுதபாணி, கொல்கத்தா.
ப: ‘இறுதிச்சிரிப்பு’ – சிறப்பு – யாருடையது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்!

 

8. கே: இராமர் பாலத்தை இராமரே கலைத்துவிட்டதாய் சேதுபுராணம் கூறுகிறது. அதன்பின் ஏது இராமர் பாலம்? புராணத்திற்கு எதிராய் நம்பிக்கை எப்படி இருக்க முடியும்? உச்சநீதிமன்றத்தில் சேதுபுராணத்தைத் தாக்கல் செய்தால் என்ன?
                                                                                                                                                                                                       – லெட்சுமி, அருப்புக்கோட்டை.
ப: அப்பாட்டுகூட ஒருவகைக் கற்பனைதான்!கட்டியிருந்தால்தானே இடிக்க முடியும்?கற்பனைகள் பலவகை; அதில் இது ஒருவகை! அவ்வளவுதான்.